வெள்ளி, 15 ஜூன், 2012

யாகங்கள் நடத்திக் கொண்டே பெரியார் பெயரை உச்சரிப்பதா?

முதல்வரை நோக்கி கலைஞர் வினா!

சென்னை, ஜூன் 15- வேத ஆகம பாராயணங் களோடு மழைக்காக யாகம் நடத்துபவர்கள் எல்லாம் தந்தை பெரி யார் பெயரைப் பயன் படுத்தலாமா என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்.
முரசொலியில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:
கேள்வி :-  மத்திய அரசின் பாடப் புத்தகங் களில்  இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக்  கிண் டல் செய்து  வெளி வந்த கார்ட்டூனை அகற்ற வேண்டு மென்று கடை சியாக தமிழக முதல மைச்சர் ஜெயலலிதாவும் ஓர் அறிக்கை வெளி யிட்டிருக் கிறாரே?

கலைஞர் :-  தேசியக் கல்வி ஆராய்ச்சி  மற்றும்  பயிற்சிக் கழகத்தின் சார் பில்  தமிழகத்தின்  இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து  12ஆம் வகுப்பு அரசியல்  அறிவியல் பாடப் புத்தகத்தில்  வெளியிட்டுள்ள கேலிச் சித்திரம்  குறித்து,  தமிழ கத்திலே உள்ள அனைத்து அரசியல்  கட்சிகளின் தலைவர் களும்  கண்டனம் தெரி வித்து,  அந்தக் கேலிச் சித்திரம் உடனடியாக அந்தப் பாடப் புத்த கத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு ஆவன செய்திட வேண்டு மென்று  அறிக்கை கொடுத்ததோடு,  போராட்டங்களும்  நடத்தி  முடித்த பிறகு,  தமிழக ஆளுங்கட்சியின் தலைவியும், முதலமைச் சரு மான ஜெயலலிதா  திடீரென  விழித்துக் கொண்டு  அவசர அவ சரமாக ஓர் அறிக்கை கொடுத்து,  அதனை தமிழ்நாட்டுப் பத்திரிகை கள் எல்லாம் முக்கியத் துவம் கொடுத்து வெளி யிட்டுள்ளன.
இந்தியை எதிர்த்து  அண்ணா முழங்கி யதையெல்லாம் ஜெய லலிதா தனது அறிக்கை யில் குறிப்பிட்டிருக் கிறார்.  ஆனால்அண்ணா அவர்களின் நூற்றாண்டு  நினைவாக  கழக ஆட்சி யில்  எழுப்பப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என்ற  கட்டடத்தை மாற்று கிறேன் என்று சண்ட மாருதம் செய்தவருக்கு,  தற்போது அண்ணா அவர்களின் பேச்சு ஞாபகத்திற்கு வந்தது ஆச்சரியம்தான்.  இதிலே  ஜெயலலிதா அறிக்கை விடுத்தாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை.   ஒட்டு மொத்த தமிழர்களை யும், அவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட் டத்தையும் கிண்டல் செய்த கேலிச் சித்திரம்  அரசின் சார்பாக வெளி யிடப்பட்டுள்ள புத்தகத் தில்  இடம் பெறக் கூடாது என்பதுதான் அனைவரின் கோரிக்கை யும், வேண்டுகோளு மாகும்.   எனவே  மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தி, இதனைப் பெரிய பிரச்சினையாக வளர்த்து விடாமல்,  உடனடியாக தலை யிட்டு  அந்தக் கேலிச் சித்திரத்தை அகற்றுவ தற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.
அதுபோலவே தந்தை பெரியாரின்  பெயரை யும் குறிப்பிட்டு அவரை அவமதிக்கும் செயல் என்றும் தனது அறிக்கை யில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக் கிறார்.   தமிழகத்திலே மழை இல்லை என்ப தற்காக திருச்சியில் காவிரியில் அ.தி.மு.க. அமைச்சரின் முன்னி லையில் வேத ஆகம பாராயணங்களோடு மூன்று நாட்களுக்கு முன்பு  யாகம்  நடத்தி விட்டு, தற்போது பெரி யாரின் பெயரைக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் திராவிடர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக