செவ்வாய், 12 ஜூன், 2012

விடுதியில் தங்கி படித்த மாணவி பலாத்காரம் ஆசிரியர்

விடுதியில் தங்கி படித்த மாணவி பலாத்காரம் ;
ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்கு
குளச்சல் அருகே உள்ள மண்டைக்காடு பருத்திவிளையை சேர்ந்தவர் உஷா (14). இவர் பூதப்பாண்டி அடுத்த எட்டாமடையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி, கேசவன்புதூரில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த விடுதியில் ஆசிரியராக இருப்பவர் ரசல்ராஜ். இவர் மாணவி உஷாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன் திடீரென மாணவி அறைக்குள் புகுந்து அவரை பலாத்காரமும் செய்துள்ளார்.
இதை வெளியே கூறினால், கொன்று விடுவதாகவும், விடுதியில் இருந்து வெளியே தள்ளி விடுவ தாகவும் மிரட்டியும் இருக்கிறார். ரசல்ராஜீக்கு, விடுதி பணியாளர் மெல்பா, வார்டன் ரெஜி, மற்றும் செவிலியர் ஒருவரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பலாத்காரம் குறித்து மாணவி வெளியே கூறவில்லை.  இந்த நிலையில் மாணவி உஷா கடந்த வாரம் வீட்டுக்கு சென்றார். மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது தான் விடுதியில் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி உள்ளார்.
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நெல்லையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்ல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி கலெக்டரிடம் அறிக்கை அளித்தனர்.
இதன் பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.க்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில், பூதப்பாண்டி போலீசார் தற்போது விடுதி ஆசிரியர் ரசல்ராஜ், விடுதி பணியாளர் மெல்பா, வார்டன் ரெஜி உள்பட 4 பேர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக