வெள்ளி, 22 ஜூன், 2012

காதல்ஜோடிகளை பந்தாடும் தமிழக கலாசார காவலர்கள்

விழுப்புரம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத சவுக்கு தோப்பில் இளைஞர்கள் கும்பலிடம் சிக்கிக் கொண்ட ‘காலேஜ் , ஸ்கூல்’ காதல் ஜோடிகளை போலீசார் மீட்டனர். 
விழுப்புரம் அருகே கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது ஆழங்கால் கிராமம். சாலையோரத்தில் அடர்த்தியான சவுக்கு தோப்புகளும், முட்புதர்களும் இங்கு அதிகம். ஒதுக்குப்புறமான பகுதி என்பதால் ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து குறைவாகவே இருக்கும். இதனால் இப்பகுதியில் காதலர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். இவ்வாறு தனியாக வரும் காதல் ஜோடிகளிடம் இப்பகுதி இளைஞர்கள் வம்பு செய்வதும் பணம் பறிப்பதும் சில நேரங்களில் நடக்கும். இந்நிலையில், சவுக்கு தோப்புக்கு வெளியே 2 பைக்குகள் இருப்பதை இளைஞர்கள் நேற்று பார்த்துள்ளனர். ‘ஜோடி சிக்கிடிச்சு’ என்று உற்சாகமாகி உள்ளே சென்றனர். மொத்தம் 2 ஜோடிகள்.

பெண்கள் இருவரும் ஸ்கூல் யூனிபார்ம் போட்டிருந்தனர். இளைஞர்கள் கலர் சட்டையில் இருந்தனர். கூட்டமாக சிலர் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோடிகள் நைசாக வெளியேற முயன்றது. இளைஞர்கள் விடவில்லை. அவர்களிடம் தகராறு செய்ய தொடங்கினர். தோப்பில் இருந்து சத்தம் கேட்டதை அறிந்து, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உள்ளே சென்றனர். போலீசை பார்த்ததும், காதல் ஜோடிகளிடம் இளைஞர்கள் வம்பு செய்துகொண்டிருந்த கும்பல் சிதறி ஓடியது. ஜோடிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இரு பெண்களும் விழுப்புரம் அரசு பள்ளியில் 10,ம் வகுப்பு மாணவிகள். காதலர்கள் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்தது. இரு ஜோடிகளையும் விழுப்புரம் தாலுகா ஸ்டேஷனில் போலீசார் ஒப்படைத்தனர். மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பதறித் துடித்து ஸ்டேஷனுக்கு வந்தனர். மாணவிகளை அடித்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். கல்லூரி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக