வியாழன், 21 ஜூன், 2012

ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கு : வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை :மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002ம் ஆண்டு அவரது வீட்டில் வைத்து சிலரால் தாக்கப்பட்டார். இதில், அவரும் அவரது மனைவி மற்றும் வேலைக்காரரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 11 பேர் மீது பட்டினப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. ராதாகிருஷ்ணன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, நான் தாக்கப்பட்டது தொடர்பாக ஜெயேந்திரர் உள்ளிட்டோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில், ஜெயேந்திரர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் நடக்கும் சாட்சி விசார
ணையில் ராதா கிருஷ்ணன் சொல்லுவதை அவர், வெளியே பேட்டியளிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக