வெள்ளி, 15 ஜூன், 2012

மோகன்லால் விரைவில் கைது? யானை தந்தம் விவகாரம்

Mohanlal Get Arrested
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானைத் தந்தங்கள் கைப்பற்றியது தொடர்பாக அவர் மீது கேரள வனத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
பிரபல மலையாள நடிகரான மோகன்லாலின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், சென்னை வீடுகளில் கடந்தாணடு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மோகன்லால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் சிக்கன. மேலும் எர்ணாகுளத்தில் உள்ள அவருடைய வீட்டில் இரண்டு யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல மாதங்கள் ஆன பிறகும் மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்ட தந்தங்கள் குறித்தோ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்தோ எந்த விசாரணையும் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் மோகன்லால் வீட்டில் கைப்பற்றிய தந்தங்கள் உண்மையான தந்தங்கள் தானா என கேட்டு தகவல் உரி்மை ஆணையத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் விண்ணபித்தார். இதற்கு பதில் அளித்த கேரள வனத்துறை மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்டது உண்மையான தந்தங்கள் தான் என்றும், அதை வைத்திருக்க அவர் லைசென்ஸ் எதுவும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மோகன்லாலிடம் விசாரணை நடத்தும்படி கேரள டிஜிபி ஜேக்கப் புன்னுவிடம் அனில்குமார் புகார் அளித்தார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கொச்சி திருக்காகரை உதவி போலீஸ் கமிஷனர் பிஜோ அலெக்சாண்டருக்கு டிஜிபி கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இதையடு்த்து மோகன்லாலிடம் விசாரணை நடத்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். கடந்த இரண்டு தினங்களாக மோகன்லால் வீட்டுக்கு சென்ற போலீசாருக்கு அவர் வீட்டில் இல்லை என்றதால் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் படப்பிடிப்புக்கு வெளியூர் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. இதற்கிடையே முறையான அனுமதி இல்லாமல் யானை தந்தங்கள் வைத்திருந்ததாக மோகன்லால் மீது கோடநாடு வனச்சரக அதிகாரி நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து மோகன்லால் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக