கண்ட்ரோல் ரூம் ப்ராஜெக்ட்டில் 25 சதவீத கமிஷனும், பாக்ஸுக்கு 2 டாலர் கமிஷனும் (110 ரூபாய்)
தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள அரசு கேபிள் டி.வி. சேவையை
சென்னையிலும் துவங்க ஜெ. உத்தரவிட்டதை அடுத்து அதற்கான முயற்சி களில் துரித
கவனம் செலுத்தி வருகிறது அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசன்.
இதற்காக, அரசு திட்டமிட்டுள்ள குறைந்தபட்ச தொகை 600 கோடி! இச்சேவையை ஜூலை 1 முதல் தமிழக அரசு துவங்க வேண்டும். ஆனால், சேவையை துவங்குவதில் சில சிக்கல்கள் இருப்பதால் மேலும் 6 மாத கால அவ காசத்தை மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது ஜெய லலிதா அரசு. எதற்காக இந்த கால அவகாசம் என விசாரித்தபோது சில பல பகீர் தகவல்கள் கிடைத்தன.
நம்மிடம் பேசிய தலைமைச் செயலகத்திலுள்ள தகவல்-தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் சிலர்,’’""இலவச சேனல்கள், கட்டண சேனல்கள் என இரண்டு வகைகளில் தனியார் டி.வி. நிறுவனங்கள் தங்களின் ஒளி பரப்புகளை செய்து வருகின்றன. இதன் மூலம் மக்களிடமிருந்து அநியாய கட்டணங்களை வசூலித்தன. இதனை தடுக்கும் முகமாக, சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய பெரு நகரங்களில் கண்டிசனல் ஆக்சஸ் சிஸ்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது மத்திய தகவல்-தொழில்நுட்ப அமைச்சகம். இதன் மூலம், மக்களுக்கு செட்டாப் பாக்ஸை எம்.எஸ்.ஓ.க்கள் வழங்க வேண்டும் என்றும் அதன் மூலம் தங்களுக்கு பிடித்தமான சேனல்களை மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளட் டும் என்றும் மத்திய அரசு விதிகளாக அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இந்த உத்தரவு கடந்த காலங்களில் மதிக்கப்படாததால் சென்னையில் இந்த சிஸ்டம் அமலாகவில்லை. இந்நிலையில், தகவல்-தொழில்நுட்பத் துறையில் சமீபகாலமாக டிஜிட்டல் தொழில் நுட்பம் விரிவடைந்திருப்பதால் கண்டி சனல் ஆக்சஸ் சிஸ்டத்தினை டிஜிட்டல் ஆக்சஸ் சிஸ்டமாக மாற்றியமைத்த மத்திய அரசு, அதனை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று கடந்த ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில், இந்த சிஸ்டத்தினை அமல்படுத்த அரசு கேபிள் டி.வி.நிர்வாகம் ஆலோ சித்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளால் ஜூலை 1-ல் சிஸ்டத்தை நடை முறைப்படுத்த முடியாத நிலை. அதனால், 6 மாத கால அவகாசத்தை மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது ஜெ. அரசு''’’என்று விவரிக்கின்றனர்.
இது தொடர்பாக நாம் மேலும் விசாரித்தபோது,’""சென்னையில் சன் நெட் வொர்க்கும், ஜேக் டி.வி.யும்தான் எம்.எஸ்.ஓ.க்களாக செயல் படுகின்றன. அதாவது, இந்த 2 நிறுவனங்கள்தான் கண்ட்ரோல் ரூம் அமைத்து சென்னையிலுள்ள 1700 கேபிள் டி.வி. ஆப ரேட்டர்களுக்கும் சிக்னல்களைக் கொடுக்கின்றன. இவர்களிட மிருந்து சிக்னல்களை பெறும் ஆபரேட்டர்கள், அதனை சென்னையிலுள்ள 40 லட்சம் வீடுகளுக்கும் கேபிள் மூலம் டி.வி.நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றனர். அதனால் சுருங்க சொல்வதாயின் இந்த 2 பெரிய வியா பாரிகளைத் தான் எம்.எஸ்.ஓ.க்கள் என்கிறோம்.
இந்த நிலையில், டிஜிட்டல் ஆக்சஸ் சிஸ் டத்தை அமல்படுத்த மத்திய அரசு கறாராக உத்தரவிட்டிருப்பதால், அதை நடைமுறைப் படுத்த வேண்டுமாயின் 40 லட்சம் வீடுகளுக்கும் செட்- டாப் பாக்ஸை வழங்க வேண் டும். அந்த பொறுப்பு எம்.எஸ். ஓ.க்களைச் சேரும். இந்த இடத்தில்தான், அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசனின் சேர்மன் உடுமலை ராதாகிருஷ்ணனும் நிர்வாக இயக்குனர் விவேகானந் தன் ஐ.ஏ.எஸ்.ஸும் தீவிரமாக ஆலோசித்தனர். இந்த ஆலோ சனையில், டிஜிட்டல் சிஸ்டத் தை அமல்படுத்த 40 லட்சம் வீடுகளுக்கும் செட்டாப் பாக்ஸ் களை வழங்க வேண்டியிருக்கும் நிலையில், 1 செட்டாப் பாக்ஸின் குறைந்த பட்ச விலை 1500 என கணக்கிட்டால் கூட, சுமார் 600 கோடி தேவைப்படும். இவ்வளவு கோடிகள் புரளும் இந்த திட்டத்தை தனியார் எம்.எஸ்.ஓ.க் களுக்கு நாம் ஏன் தரவேண்டும்? செட்டாப் பாக்ஸை நாமே வழங்கினால் என்ன? என்று யோசித்து செட்டாப் பாக்ஸை வழங்க வேண்டுமாயின் சென் னையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் எம்.எஸ்.ஓ.வாக மாறவேண்டும். அதற்கு அரசு கேபிள் சேவையை சென்னை யிலும் துவங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். உட னே இதனை ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்று அனுமதியும் பெற்றார்கள்.
அதன்படி, சென்னை யிலும் அரசு கேபிள் சேவை கொண்டு வரப்படும் என அறிவித்தனர். இச்சேவையை துவக்க வேண்டுமானால், கண்ட்ரோல் ரூம் அமைக்க வேண்டும், செட்-டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த 2 செயல் திட்டங்களை செயல்படுத்த முறைப்படி டெண்டர்கள் விடப் படவேண்டும். ஆனால், டெண்டர் விடப்படுவதற்கு முன்பே பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது அரசு கேபிள் டி.வி. நிர்வாகம். அதில் சில பல பேரங்கள் படியாததால் டெண்டர் விடுவது இழுத்துக்கொண்டே போனது. அதனால்தான் மத்திய அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், சமீபத்தில்தான் செட்-டாப் பாக்ஸ் தயாரிக்கும் பிரபல வெளிநாட்டு நிறுவனம் ஒன்று, அரசு கேபிள் டி.வி. நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டது. எதிர்பார்ப்புகள் உறுதி செய்யப்பட்டதினால் அண்மையில்தான் முறைப்படி டெண்டர் விடப் பட்டிருக்கின்றன. இந்த டெண்டர், 13-ந் தேதி திறக்கப்படவிருந்தது. தற்போது அது 20-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை நடைமுறைப்படுத்த 6 மாத காலம் தேவைப்படும் என்பதால்தான் அவகாசம் கேட்டிருக்கிறது அரசு.
டெண்டரில் கலந்துகொள்ள பல நிறுவனங்கள் போட்டி போடும். ஆனால், தங்களின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்ற ஒப்புக்கொண்டிருக்கும் அந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கே டெண்டர் கிடைக்க வேண்டுமென்பதற்காக, குறிப்பிட்ட அந்த கம்பெனி யின் செட்-டாப் பாக்ஸ் தயாரிப்பு ஸ்பெசிஃபிகேசன் களையே டெண்டரின் விதிகளாக புகுத்தியிருக்கிறது அரசு கேபிள் டி.வி. நிர்வாகம். எந்த ஒரு ஆட்சி யிலும் நடக்காத புதுவித டெக்னிக்காக இருக்கிறது இது'' என்று சுட்டிக் காட்டுபவர்கள், ""இந்தியாவில் தகவல்-தொழில்நுட்பத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், கேபிள் டி.வி. நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டி ருக்கும் அந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது துணை நிறுவனத்தின் மூலமாக இந்த டெண்டரில் நுழைகிறது.
சென்னையில் அரசு கேபிள் சேவையை துவங்க அமைக்கப்படும் கண்ட்ரோல் ரூம் ப்ராஜெக்ட்டில் 25 சதவீத கமிஷனும், செட்டாப் பாக்ஸ் கொள்முதலில் 1 பாக்ஸுக்கு 2 டாலர் கமிஷனும் (110 ரூபாய்) கொடுக்க அந்த வெளிநாட்டு நிறுவனத்துடன் பேசி முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி முதல்கட்டமாக, 20 லட்சம் பாக்ஸ்களை கொள்முதல் செய்கிறது அரசு கேபிள் டி.வி. நிர்வாகம்''’’என்கிறார்கள் விவரமறிந்த தகவல்-தொழில் நுட்பத்துறையினர்.
அரசு கேபிள் டி.வி.சேவை சென்னையிலும் துவங்கப்படுவது குறித்து, தமிழ்நாடு கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் சகிலனிடம் கேட்ட போது,’’""அரசு கேபிள் டி.வி. சேவையை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் இதற்கான நடைமுறைகள் நேர்மையாகவும் கேபிள் டி.வி.ஆபரேட்டர்களை பாதிக்காத வகையிலும் இருக்க வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. சென்னையி லுள்ள 40 லட்சம் மக்களில் 27 லட்சம் பேர் ஏழைகள். இவர்களிடம், கேபிள் கட்டணம் 100 ரூபாய் வசூலிப்பதே கடினமாக இருக்கிறது. அந்த சூழலில், 1500 ரூபாய் கொடுத்து செட்டாப் பாக்ஸை வாங்க வலியுறுத்தினால் அவர்கள் நொந்து போவார்கள். அதனால், செட்டாப் பாக்ஸ்களை தமிழக அரசே மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்''’ என்கிறார்.
அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசன் வட்டாரத்தில் விசாரித்தபோது,’’""இரு மாதங்களுக்கு முன்பு அரசு கேபிள் டி.வியின் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் மீட்டிங் நடந்தது. அதில் ஹோம் செக்ரட்டரி, ஐ.டி. செக்ரட்டரி கலந்துகொண்டனர். அப்போ, பல தனியார் சேனல்கள் தங்களுக்கான பிளேஸ்மெண்டை (சேனல் ஒளிபரப்பப் படும் இடம்) மாற்றித் தாருங்கள்னு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதை மாற்றி புதிய ஒதுக்கீடுகளை செய்யலாமா? என்று ராதாகிருஷ்ணனும் விவேகானந் தனும் கேட்டனர். அதற்கு ஹோம் மற்றும் ஐ.டி. செக்ரட்டரிகள், "பிளேஸ்மெண்ட் குறித்து ஒரு கடிதத்தை மட்டும் அனுப்பி வையுங்க. ஒதுக்கீடு செய்வதில் இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்' என்று சொன்னார்கள். இந்த ஒரு வார்த்தைதான் தங்களுக்கு வேணும் என நினைத்த ராதாகிருஷ்ணனும் விவேகானந்தனும் அது தொடர்பான கடிதத்தை பிரபல சேனல்கள் முதல் லோக்கல் சேனல்கள் வரை அனுப்பி வைத்தனர். உடனே பல டி.வி. நிறுவனங்கள் கேபிள் டி.வி. கார்ப்பரேசனை முற்றுகையிட்டன.
கார்ப்பரேசனில் இருக்கும் இரண்டு புரோக்கர்கள், முற்றுகையிட்ட சேனல் நிறுவன ஆட்களிடம் "உங்க சேனல் பிரைம் பேண்ட் வரிசையில் ஒளிபரப்பாகாமல் எங்கேயோ ஒளிபரப்பாகிறது. அதனால் உங்க சேனல் நல்லா தெரியலை. உங்க சேனல் நல்லா தெரிய ணும்னா பிரைம் பேண்டில் வந்தாகணும். ஸோ.. அதற்கான பிளேஸ்மெண்டை நிர்வாகம் உங்களுக்கு ஒதுக்கித் தரும். அதற்கு இவ்வளவு ரேட்' என்று பிரைம் பேண்டின் வரிசைக்கு தகுந்த மாதிரி, 1 சி, 2 சி, 3 சி என பேரம் பேசி னார்கள். இதற்கு பல சேனல்கள் ஒத்துக் கொண்டன. முக்கிய வி.ஐ.பி.க்கள் நடத்தும் சில சேனல்களும் பல லோக்கல் சேனல்களும் இன்றைக்கு பிரைம் பேண்டில் ஒளிபரப் பாவதற்கு இதுதான் பின் னணி. ஆக, பிளேஸ் மெண்ட் ஒதுக்கப்பட்டதில் கோடிகளை அள்ளி குவித்திருக்கிறது அரசு கேபிள் டி.வி. நிர்வாகம். ஆனால் இந்த கோடிகள் கேபிள் டி.வி. கார்ப்ப ரேசனின் வளர்ச்சிக்காக போகவில்லை. மொத்தத் தில், செட்டாப் பாக்ஸ் கொள்முதல், பிளேஸ்மெண்ட் ஒதுக்கீடு விவகாரங்களில் தனி நபர்களின் சூட்கேஸ்கள் நிரம்பி வழி கின்றன''’’என்று சுட்டிக் காட்டினார்கள்.
இது குறித்து அரசு கேபிள் டி.வி. கார்ப்ப ரேஷனின் சேர்மன் உடுமலை ராதா கிருஷ்ணனை சந்தித்து குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, ""டெண்டர்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். அதே சமயம், டெண்டர் விதிகளில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது, அதிகாரிகளுக் குத்தான் தெரியும். சேனல்களுக்கு ப்ளேஸ் மெண்ட் ஒதுக்குவதிலும் எந்த முறைகேடும் நடக்கவில்லை. சென்னை நீங்கலாக, தமிழகம் முழுவதும் அனலாக் சிஸ்டம் இருப்பதால், பல இடங்களில் பல சேனல்கள் கிராஸ் ஆகிறது. அதனால், அதை சரி செய்வதில் பல சேனல் களுக்கு பிரைம் பேண்ட் கிடைத்திருக்கலாம். அத னால் முறைகேடு எதுவும் இல்லை'' என்கிறார்.
இதேபோல, நிர்வாக இயக்குநர் விவேகானந்தனின் கருத்தறிய பலமுறை தொடர்புகொண்டு பேசியபோது, ""மீட் டிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுங்கள்'' என்றே பதில் தந்தார்.
-ஆர்.இளையசெல்வன்
படங்கள் : அசோக்
thanks nakkeeran + gobi NY

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக