வெள்ளி, 1 ஜூன், 2012

பிரதமர் மீதான ஊழல் புகார் விசாரணை நடத்த சி.பி.ஐ நிலக்கரி சுரங்க முடிவு?



 Cvc Refers Coal Block Allocation Case Cbi
பிரதமர் மன்மோகன் சிங் மீதான ரூ1. லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐக்கு மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ ஆராய ஆரம்பித்துள்ளது.
2008-2009ம் ஆண்டில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றது என்பது தணிக்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ள புகார். இந்தப் புகாரை கையில் எடுத்துக் கொண்டுள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவினர் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி வந்தனர்.


தம் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என்றும்கூட மன்மோகன் சிங் கூறியிருந்தார். இந் நிலையில் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சி.பி.ஐக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்தது.

இதையடுத்து நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக எப்படி விசாரணை நடத்துவது என்பது குறித்து இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இந்த ஊழல் தொடர்பான புகாரில் கூறப்பட்ட விவரங்களை சிபிஐ ஆராய ஆரம்பித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புகாரில் உண்மையிருப்பதாக சிபிஐ கருதினால் முழு அளவிலான விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக