இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவெனில் மதுரை ஆதீன மடமும் மூடப்படுகிறது....!
மதுரை: நித்தியானந்தா பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளதாலும், தலைமறைவாகி விட்டதாலும், அவரை கர்நாடக போலீஸார் தீவீரமாக தேடி வருவதாலும், மதுரை ஆதீன மடத்தை மூடி விட்டனர், பூஜைகளையும் நிறுத்தி விட்டனர்.இதனால் மதுரை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மதுரை ஆதீன மடத்திற்கு வந்த சோதனை இன்னும் தீரவில்லை.தொடர்ந்து ஆட்டிப்படைத்து அலைக்கழித்து வருகிறது.
இந்த மடத்தின் வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்த மதுரை ஆதீனம் தற்போது ஏகப்பட்ட பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.இந்த நிலையில்தான் கர்நாடகத்தில் கன்னட பத்திரிக்கையாளர்களுடன் மோதி நித்தியானந்தா பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். தலைமறைவாகி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.அவர் எங்கிருக்கிறார் என்பது பெரும் மர்மமாக உள்ளது. அவரது வாழ்க்கையில் இது இரண்டாவது தலைமறைவு ஓட்டமாகும்.
பிடதி ஆசிரத்தை மூடி சீல் வைக்க கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா உத்தரவிட்டு விட்டார். நித்தியானந்தாவையும் பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மதுரைக்கு நித்தியானந்தா தப்பி ஓடி வந்துள்ளதாகவும், ஆதீன மடத்துக்குள்ளேயே அவர் பதுங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் மதுரை பக்கம் கர்நாடக போலீஸாரின் பார்வை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை போலீஸாரின் உதவியுடன் ஆதீன மடத்திற்குள் புகுந்து நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் கைது செய்யலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த நிலையில் திடீரென ஆதீன மடத்தை பூட்டி விட்டார்கள். இரு பக்க கேட்களும் மூடப்பட்டுள்ளன.தற்காலிகமாக மடம் மூடிவைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு ஒன்றை வைத்துள்ளனர்.
இனால் மதுரை ஆதீன மடத்தை இன்னும் மலை போல நம்பியிருக்கும் அப்பாவி பக்தர்கள் பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக