வியாழன், 21 ஜூன், 2012

தலிபான்கள் தடை போலியோ சொட்டு மருந்து பிரச்சாரத்துக்கு

இஸ்லாமாபாத், ஜூன் 19- பாகிஸ்தானின் வஜிரிஸ் தான் பகுதியில்,போலியோ சொட்டு மருந்து திட்டத் துக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வாஜிரிஸ்தான் பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த பகுதியை அரசு பெயர ளவில் தான் ஆட்சி செய் கிறது. மற்றபடி இங்கு பழங்குடிகள் போர்வை யில் தலிபான்களின் ஆதிக் கம் அதிகம் உள்ளது.
அல்-குவைதா தலை வர் ஒசாமா பின்லாடன், அபோதாபாத்தில் கடந்த ஆண்டு அமெரிக்க அதி ரடி படையினரால் கொல் லப்பட்டார்.
போலியோ சொட்டு மருந்து கொடுப் பது போன்ற போர்வை யில் பாகிஸ்தான் டாக்டர் ஷகீல் அப்ரிடி, ஒரு குழுவை அமைத்து ஒசாமாவை நோட்டமிட்டு அமெ ரிக்க உளவு படையின ருக்கு அவர் பதுங்கியி ருந்த இடத்தை காட்டிக் கொடுத்தார். இதற்காக அப்ரிடிக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.

"சொட்டு மருந்து போடுவதாக கூறி அமெ ரிக்கா வேவு பார்ப்பதால், வாஜிரிஸ்தான் பகுதியில் போலியோ தொடர்பான எந்த பிரச்சாரமும் மேற் கொள்ளக்கூடாது. அது மட்டுமல்லாது பழங்குடி பகுதியில் அமெரிக்கா வின் ஆளில்லாத விமா னங்கள் தாக்குதல் நடத்து வதால் அப்பாவிகள் பலர் பலியாகின்றனர்.
எனவே, அமெரிக்கா ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக் குதல் நடத்துவதை நிறுத் தும் வரை, இந்த பகுதியில் போலியோ சொட்டு மருந்து பிரச்சாரம் நடத்த தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் தெரிவித்து உள்ளனர்.
"தலிபான்களின் இந்த உத்தரவால், போலியோ வால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை அதி கரிக்கும். எனினும் தலி பான்களின் உத்தரவை மீறி செயல்பட முடி யாது என, வாஜிரிஸ்தான் மக்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக