சனி, 2 ஜூன், 2012

முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடத்த சென்ற போலீசார் சிறை பிடிப்பு- வாரண்ட் இல்லாமல் வந்ததாக புகார்

 Police Try Raid I Periyasami House
திண்டுக்கல்: முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் திண்டுக்கல் வீட்டில் போலீசார் சோதனை நடத்த முயற்சித்தனர். வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்த வந்ததாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட போலீசாரை ஐ. பெரியசாமியின் ஆதரவாளர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சிக்காலத்தில் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஐ. பெரியசாமி. அண்மையில் இவரது வீடு, மகன் மற்றும் மகள் வீடுகளிலும் நூற்பாலைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் திண்டுக்கல்லில் உள்ள ஐ. பெரியசாமியின் வீட்டுக்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்த சென்றனர். ஆனால் வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்த வந்ததாகக் கூறி ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேலும் சோதனை நடத்த வந்த 50-க்கும் மேற்பட்ட போலீசாரையும் ஐ. பெரியசாமியின் ஆதரவாளர்கள் சிறை பிடித்தனர். பின்னர் வேறுவழியின்றி சோதனை நடத்த முடியாமல் போலீசார் திரும்பி வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக