திங்கள், 25 ஜூன், 2012

அழகிரி தலைமையில் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம்!

4ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதற்காக மதுரை மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும 27ஆம் தேதி தயா திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் நடைபெறும் என்றும், இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட துணைச் செயலாளர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அமைச்சரும் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, இன்று (25.06.2012) சென்னையில் திமுக தலைவர் கலைஞரை சந்தித்துவிட்டு மாலை மதுரை திரும்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக