செவ்வாய், 19 ஜூன், 2012

சமந்தாவிற்கு அடித்த பம்பர் பரிசு!

பொதுவாகவே மணிரத்னம் படத்தில் நடித்த நடிகைகளையே தன் படத்திலும் நடிக்க வைக்க ஷங்கர் ஆசைப்படுவார். ’ஜென்டில் மேன்’ மதுபாலா,’இந்தியன்’ மனிஷா கொய்ராலா, ’ஜீன்ஸ்’ ஐஸ்வர்யாராய் என்று குறிப்பிட்டு சொல்லலாம்.
ஷங்கர் இயக்கும் அடுத்தப் படத்திலும் மணிரத்னம் படத்தில் நடித்த ஹீரோயின் தான். ஆனால் அந்த ஹீரோயின் மணிரத்னம் படத்தில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டவர். ஆம், சமந்தாவே தான்! கடல் படத்தில் தான் இல்லை என்பது சோகமான செய்தியாக இருந்தாலும், இப்போது பம்பர் பரிசு அடித்திருக்கிறது சமந்தாவிற்கு.கடல் படத்திலிருந்து சமந்தா நீக்கப்பட்டதைப் பற்றி பேசியவர்களே அசந்து போகும் வகையில் தனது அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் 
சமந்தா. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் விக்ரம் நடிப்பிலும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இயக்கும் தென்றல் படத்தில் ஹீரோயினாக நடிக்க சமந்தா சம்மதித்துள்ளாராம். இதுவே பெரிய விஷயம் தான்!சமந்தா இந்த படத்தில் நடிக்க 1.20 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஷங்கர் தனது படங்களுக்கு வருடக்கணக்கில் ஷூட்டிங் நடத்துவார். அதுவே ரசிகர்களிடையே ஏகத்துக்கும் எதிர்பார்ப்பைக் கிளப்பிவிடும். அதே போல் அவர் இயக்கும் அடுத்தப் படத்திற்கு 180 நாட்கள் ஹீரோயின் -small;>கால்ஷீட் தேவைப்படுகிறதாம். அதற்காகத் தான் சமந்தாவுக்கு அவ்வளவு சம்பளம்.>இயக்குனர் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்திற்கு கொடுக்க முடியாமல் போன பல்க் கால்ஷீட் ஷங்கர் படத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதிலிருந்து ‘கடல்’ படத்திலிருந்து சமந்தா விலகியதன் காரணத்தை  ரசிகர்கள் கவனிக்கத் தவறினால் நாங்கள் பொருப்பல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக