சனி, 23 ஜூன், 2012

கேரளா சிறுவாணியில் அணை கட்டினால் லாரிகளை நிறுத்துவோம்

சிறுவாணியில் அணை கட்டினால் லாரிகளை நிறுத்துவோம்: கேரளத்துக்கு லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் முயற்சியைத் தொடங்கினால் தமிழ்நாட்டிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை கேரளத்துக்கு ஏற்றிச் செல்லு லாரிகளை நிறுத்திவிடுவோம் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. அப்படி அணை கட்டினால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படும். அதே போல கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகளும் நிறுத்தப்படும்.
தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பால், கோழி, முட்டை காய்கறிகள், துணிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்துதான் கேரளாவுக்கு செல்கின்றன. அவர்கள் எந்தவித உணவுப் பொருட்களையும் விளைவிப்பது இல்லை. அணை கட்டினால் தமிழகத்தில் இருந்து எந்தவிதப் பொருட்களும் கேரளாவுக்கு லாரிகளில் அனுப்பமாட்டோம். இதனால் உணவுக்கு அவர்கள் துன்பப்படக் கூடிய நிலை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக