வெள்ளி, 29 ஜூன், 2012

பில்லாவும், ரங்காவும் காதலிலும், காமெடியிலும் கலக்குவார்கள்.

பசங்க, வம்சம், மெரினா படங்களின் இயக்குனர் பாண்டிராஜ் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். எஸ்கேப் ஆர்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ், பசங்க புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என பெயர் வைத்திருக்கின்றனர்.
 பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க படத்தில் நடித்த விமல், மெரினா படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் இந்த படத்தின் பில்லா, ரங்காவாக நடிக்கின்றனர். 
தேசிய விருது பெற்ற தம்பிராமையா மற்றும் சூரி ஆகியோரும் இந்த படத்தில் துணை நடிகர்களாக நடிக்கின்றனர். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தை பற்றி பேசிய பாண்டிராஜ் “ இந்த படம் என் முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டிருக்கும். காதல் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். பில்லாவும், ரங்காவும் காதலிலும், காமெடியிலும் கலக்குவார்கள். அடுத்த மாதம் திருச்சியில் படப்பிடிப்பு துவங்குகிறது” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக