திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய தம்பி கே.என்.ராமஜெயத்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் வரை தாடி எடுப்பது இல்லை என்கிற உறுதியுடன் இருந்தார். ஆனால் போலீசார் நடவடிக்கையும் குழப்பம் குழப்பம் என்று நீடித்துக்கொண்டே இருந்தது.
சென்னையில் திமுக தலைவர்
கலைஞரின் பிறந்த நாளின் போது, அவரைப் பார்க்க கே.என்.நேரு சென்றுள்ளார்.
அப்போது, கே.என்.நேருவிடம், உங்களிடம் பழைய உற்சாகத்தை பார்க்கமுடியவில்லை,
ராமஜெயத்தின் இழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்து என்ன
நடக்கிறது என்று பார்க்க வேண்டும். சராசரி வாழ்க்கைக்கு திரும்புங்கள்
என்று கலைஞர் கூறியதாக நேருவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில்
நேருவுக்கு வேண்டப்பட்ட கட்சிகாராகள் 2 பேர், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு
வெவ்வேறு இடங்களில் உள்ள சாமியார்களிடம் குறி கேட்க அவர்கள் இந்த கொலையில்
மர்மமே நீடிக்கும் கொலையாளியை கடைசி வரைக்கும் போலீசார் கண்டுபிடிக்காமல் செய்து விடுவார்கள் என்று சொல்லியுள்ளனர்.
இதனால், சரி இனிமேல்
நடப்பதை கவனிப்போம் என்று அம்மா மண்டபத்திற்கு சென்று மொட்டை
அடித்துவிட்டு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிவித்துவிட்டு, திருச்சி சிறையில்
உள்ள ஐ.பெரியசாமியை சந்திக்க சென்றார் நேரு.
மொட்டை போட்ட தகவல்
போலிஸ் டிப்பாட்மெண்ட மத்தியலும், கட்சிகாரர்கள் மத்தியிலும் பெரிய
பரபரப்பை உண்டாக்கியது. காரணம் கொலைகாரனை கண்டுபிடித்துவிட்டார்கள் அதனால்
தான் நேரு மொட்டை அடித்துவிட்டார் என்று பரபரப்பு அடைந்து விட்டது.
போலீஸ் இனி
கண்டுபிடிக்காது என்கிற உணர்வில் நேரு மொட்டை அடித்துவிட்டார் என்று
தெரிந்து கொண்ட புதிய தனிப்படை போலிஸ் டீம் காட்டாயாம் கண்டு
பிடித்துவிடுவோம் என்கிற ரீதியில் செல்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக