மதுரை:""பொது இடங்களில் பட்டாசு வெடித்தால் மூன்றரை ஆண்டு
சிறைத் தண்டனை, அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தால் ஆறு ஆண்டு சிறைத்
தண்டனையும் கிடைக்கும்,'' என மதுரை போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணன்
எச்சரித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: திருமணம், கோயில், அரசியல்
விழா <உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, ரோட்டில் பட்டாசு வெடிப்பதால்
பொதுமக்கள், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுகிறது. தங்களது வீடுகள்,
சொந்த இடங்களில் பட்டாசு வெடிக்க தடை இல்லை. பொது இடங்கள், ரோட்டில்
வெடிக்க அனுமதியில்லை. மீறினால், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு
285(தீப்பற்றக்கூடிய பொருள், அசட்டை) மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டப்படி
வழக்குப்பதிவு செய்யப்படும். இதற்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை
கிடைக்கும்.அதேபோல், பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி பெற வேண்டும். அவற்றில், பிறர் மனதை புண்படுத்தும் வாசகங்கள், படங்கள் இருக்கக்கூடாது. அனுமதியின்றி வைத்தால், அவை அகற்றப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும், என தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக