வியாழன், 28 ஜூன், 2012

Advani அதிர்ச்சி போட்டியிலிருந்து சங்மா விலக ஜெ. வேண்டுகோள்

 Jaya Shocks Bjp Wants Sangma Quit Prez Race குடியரசுத் தலைவர் போட்டியிலிருந்து சங்மா விலக வேண்டும்-அத்வானிக்கு ஜெ. வேண்டுகோள்

டெல்லி: குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து பி.ஏ.சங்மா விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் பேசியிருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மா போட்டியிடுவதாகவும் அவரைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் முதலில் அறிவித்தவர்கள் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும்தான். அதைத் தொடர்ந்து சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியிலும் இருவரும் இறங்கினர்.
ஆனால் அவர்களது முயற்சிக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு அத்தனையும் காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.

அதேசமயம், அப்துல் கலாம் பெயரை வைத்து மமதா பானர்ஜி திடீரென புதிய திருப்பத்தைக் கொண்டு வந்தார். ஆனால் அதற்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் போலத் தெரிகிறது. தான் ஆதரவளித்துள்ள சங்மா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளதாக புதிய பரபப்புச் செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று தன்னிடம் தொலைபேசியில் அத்வானியிடம் ஜெயலலிதா கூறுகையில், வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டு பின்னர் சங்மா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று தெரிவித்தாராம். இதைக் கேட்டு அத்வானி அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
இன்று சங்மா வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அப்போது ஜெயலலிதாவும் டெல்லியில் இருக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக ஜெயலலிதாவுக்குப் போன் செய்தபோதுதான் அத்வானிக்கு இந்த அதிர்ச்சிச் செய்தியைக் கொடுத்தாராம் ஜெயலலிதா. மேலும் தான் டெல்லிக்கு வர முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
கொடநாடு எஸ்டேட்டில் தான் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு தன்னால் எங்கும் பயணம் செய்ய முடியாது என்றும் அத்வானியிடம் ஜெயலலிதா கூறியதாக தெரிகிறது.
ஜெயலலிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதையடுத்து பாஜக தனது நிலை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனையில் அது இறங்கியுள்ளது.
தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ, நாராயணா....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக