அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேடாபாளர் என். ஜாகீர் உசேன் 30,500 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்து, திராணியையும் நிரூபித்தார்.
இந்தத் தொகுதியில் கடந்த ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் என். ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் என். சீனிவாசன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 17 பேர் உள்பட மொத்தம் 20 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
தொகுதியின் மொத்த வாக்காளர்களான 1,94,980 பேரில், 1,43,277 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். 49 ஓ பிரிவில் 47 பேர் வாக்களித்திருந்தனர். இந்தத் தொகுதியில் 73.48 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 4.15 மணிக்கு முடிவடைந்தது. இதில் அனைத்து சுற்றுக்களிலுமே அதிமுக வேட்பாளரே முன்னணியில் இருந்தார்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 1,01,998 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் 30,500 வாக்குகள் பெற்றார்.
இதன்மூலம் 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.
ஆனால், அதிமுக நினைத்தபடி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தைத் தாண்டவும் இல்லை, முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தில் கூறியபடி தேமுதிக வேட்பாளர் டெபாசிட் இழக்கவும் இல்லை.
அதிமுக, தேமுதிகவைத் தவிர மற்றவர்களின் டெபாசிட் தொகை பறிபோனது. இந்தத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக