வியாழன், 21 ஜூன், 2012

பிரணாப் 52%, சங்மா 33% எப்படி ஜெயிப்பார் சங்மா??

India How Can Sangma Win With Just 33 Votes
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போதுள்ள லேட்டஸ் நிலவரப்படி பிரணாப் முகர்ஜிக்கு கிட்டத்தட்ட 52 சதவீதத்திற்கும் மேலான ஓட்டுக்கள் சேர்ந்துள்ளன. அதேசமயம், பி.ஏ.சங்மாவுக்கு 33 சதவீத அளவிலான வாக்குகளே சேகரமாகியுள்ளன. 
இதனால் சங்மா எப்படி வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே ஏதோ ஒரு கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகின்றன. தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், அதிமுக, பிஜூ ஜனதாதளம், பாஜக, சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்ற பி.ஏ.சங்மாவும் களத்தில் உள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை ஒவ்வொருவராக அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரணாப் முகர்ஜிக்கு இதுவரை காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்டிரிய லோக்தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
சங்கமாவைப் பொறுத்தவரை அதிமுக, பாஜக, பிஜூ ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றின் ஆதரவுதான் உறுதியாகியுள்ளது.
இதை வைத்துக் கணக்குப் போட்டால் தற்போது பிரணாப் முகர்ஜிக்கு கிட்டத்தட்ட 52 சதவீதத்திற்கு மேலான வாக்குகள் சேகரமாகியுள்ளன. இடதுசாரிகள் ஒருவேளை அவரை ஆதரிப்பதாக அறிவித்தால் இந்த அளவானது 57 சதவீதமாக உயரும்.
அதேசமயம், சங்மாவுக்கு தற்போது கிட்டத்தட்ட 33 சதவீத அளவுக்குத்தான் வாக்குகள் உள்ளன. மமதா மற்றும் இடதுசாரிகளின் ஆதரவை வாங்கினாலும் கூட 40 சதவீதத்தை அவரால் தாண்ட முடியாது என்றே தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியிடம் மட்டும் தனியாக 30 சதவீத வாக்குகள் உள்ளன. பாஜகவின் வாக்கு பலமானது 21 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக