தமிழக பெண்கள் புகாரில் சிக்கிய மும்பை நபர்!
மும்பையைச் சேர்ந்தவர்
அமீர்கான் என்கிற ஆரிஸ்கான். இவருக்கு வயது 27. இவர் தன்னை இணையதளம் மூலம்
நம்பவைத்து மோசடி செய்துவிட்டதாக சென்னை மன்னடியைச் சேர்ந்த ஒரு பெண்
சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு புகார்
அளித்திருந்தார்.
இதேபோன்று சென்னை
சைதாப்பேட்டையைச் சேர்ந்த என்ஜீனியரிங் மாணவி ஒருவரும் புகாரை அதே மாதம்
கொடுத்திருந்தார். அவர் கொடுத்த புகாரில் தன்னை ஏமாற்றியவர் பெயர் வித்யோக்
என்றும், ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வித்யோக்கின் முகவரியாக விழுப்புரம் மாவட்டத்தை கூறியிருந்தார். இந்த
இரண்டு பெண்களும் கொடுத்த புகார் ஒரே நபரைப் பற்றியதுதான்.
வித்யோக்குக்கு அவன்
சொந்த கிராமமான சொக்கன்தாங்கலில் கூப்பிடும் பெயர் சக்கரே என்கிற
சர்க்கவர்த்தி. நண்பர்கள் மத்தியில் தமிழ் என்கிற தமிழ்ச்செல்வன்.
போலீசாரிடம் அமீர்க்ôன் பற்றிய தகவலும், வித்யோக் பற்றிய தகவலும் ஒன்றாக
இருந்ததால் போலீசார் விசாரணையில் வேகம் காட்டினர்.
அதன் பலனாக வித்யோக்
பிடிபட்டார். கணிணியில் டிப்ளமோ படித்துள்ள வித்யோக் ஒரு புதுமாப்பிள்ளை. 5
மாத கர்ப்பிணி மனைவி உள்ளார். வீட்டில் இருக்கும் நேரத்தில் எல்லாம்
இணையதளம் மூலம் வரன் தேடும் பெண்களை தொடர்பு கொண்டு அவர்கள் எதிர்பார்ப்பு
என்னவோ அதை பூர்த்தி செய்யும் படி தகவலை அனுப்பி வைத்து வந்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ்
அதிகாரி, என்ஜீனியர், டாக்டர், கல்லூரி பேராசிரியர் என்று பல முகங்களில்
இவருடைய பதில் இருந்தது. இதனால் ஏராளமான பெண்கள் வித்யோக் வலையில்
விழுந்துள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் புதுவை, திருச்சி உள்ளிட்ட 15
இடங்களில் இவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்து உள்ளதும் தெரிய
வந்தது.
திருமண ஆசைக்காட்டி
ஏமாற்றிய பெண்களிடம் இவர் உல்லாசமாகவும் இருந்துள்ளது விசாரணையில் தெரிய
வந்துள்ளது. இந்நிலையில் இவரை சென்னை போலீசார் கைது செய்தனர். சென்னை
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், இவனிடம்
விசாரணை நடத்தினார்.
பெண்களை ஏமாற்றி மோசடி
செய்து சம்பாதித்த பணத்தில் இவருக்கு பல்வேறு இடங்களில் சொந்தமாக பங்களா
வீடுகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த
அமீர்கான் என்கிற ஆரிஸ்கான் என்பவனும் இதே ஸ்டைலில் இதே மோசடியில் ஈடுபட்டு
போலீசில் சிக்காமல் வருட கணக்கில் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளான். இவன்
மீதும் சென்னை மன்னடி, சைதாப்பேட்டை, டி.நகர் பகுதிகளைச் சேர்ந்த 50
பெண்கள் பல்வேறு நகரங்களில் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
பெங்களூருவில் ஒரு
நட்சத்திர ஓட்டலில் அழகி ஒருவருடன் உல்லாசமாக இருந்த அமீர்கானை போலீசார்
15.06.2012 அன்று இரவு கைது செய்தனர். அவனிடம் இருந்து ஏராளமான
செல்போன்கள், ஐபேடு, லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவனுக்கும் வித்யோக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார்
விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைப் பற்றி
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இவர்கள் மிகப்பெரிய நெட்வொர்க்
வைத்து நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள். காணாமல் போயுள்ள
இளம்பெண்கள் பற்றியும் இவர்களிடம் விசாரித்து வருகிறோம். இவர்கள்
வெளிநாட்டு சதிகும்பலுடன் தொடர்பில் இருக்கும் கடத்தல் பேர்வழிகளா என்றும்
விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு
கல்யாண மன்னனும், மும்பைச் சேர்ந்த ஒரு கல்யாண பேரரனும் சிக்கியிருப்பது
போலீசாரை நிம்மதியடைய வைத்துள்ளது. இவர்கள் மூலம் பல விஷயங்கள் வெளியில்
வரலாம் என கருதப்படுகிறது.
சென்னைக்கு கொண்டு
வரப்பட்ட அமீர்கானிடம் இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை முடிவில் பல
திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக