பாகிஸ்தான் நாட்டில் இருந்து 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்ற அந்நாடு முடிவு செய்துள்ளது.ஆப்கானிஸ்தானில்
தலிபான்களுக்கும் நேட்டோ படையினருக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.
இதனால் பக்கத்து நாடான பாகிஸ்தானில் அகதிகளாக ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள்
தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர்-
பக்துனகவா மாகாணத்தில் சிலர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.மொத்தமாக பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 லட்சம் பேர் அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான கெடு இன்றுடன் முடிகிறது.
பாகிஸ்தானின் நடவடிக்கையால் ஆப்கானிஸ்தான் அரசு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆப்கானியர்கள் வெளியேறாவிட்டால் கணக்கெடுக்கப்பட்டு கைது செய்யப்படுவர் என்றும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக