ஞாயிறு, 24 ஜூன், 2012

இல்லாத மூலிகை பண்ணை 150 கோடி ரூபாய் மோசடி! முட்டாள் ஜனங்கள்

இல்லாத மூலிகை பண்ணையின் பெயரில் 150 கோடி ரூபாய் மோசடி!விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகதீசன் இவர் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கப்பட்டியில் உள்ள தன்னுடைய ஜெனித் ஹெற்பல்ஸ் என்ற மூலிகை பண்ணையில் விளையும் மூலிகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அந்த பன்னையின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு பணம் தேவைபடுவதாகவும், இந்த மூலிகை பன்னையில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஒரே மாதத்தில் இருட்டிப்பாக பணம் கொடுபதாக சொல்லி சேலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் சென்று விளம்பரம் செய்தார்.


பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்ய அந்த பகுதிகளில் பல அறிமுகமான நபர்களை முகவர்களையும் நியமித்தார் ஜெகதீசன்.

முதலில், சொன்னபடியே பணம் வாங்கிய எல்லோருக்கும் வீடு தேடி சென்று பணத்தை இரட்டிப்பாக கொடுத்துள்ளார் ஜெகதீசன். இதை உண்மை என்று நம்பிய பொதுமக்கள் இரட்டிப்பாக்கி கொடுத்த பணத்துடன் தங்களின் கையில் இருந்த எல்லா பணத்தையும் ஜெனித் ஹெற்பல்ஸ் நிறுவனத்தில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்துள்ளனர்.


மூன்றே மாதத்தில் சேலம் சுற்றுபகுதியில் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துகொண்டு கடந்த மாதம் ஜெகதீசன்  காணாமல் போய்விட்டார்.

பணம் கட்டி ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிபடையில், ஜெகதீசனுக்கு முகவர்களாக இருந்து பணம் வாங்கி கொடுத்த முப்பதுக்கும் அதிகமானவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் சேலம் மாவட்ட போலீசார்.

இந்த நிலையில், மூலிகை பண்ணை உள்ளதாக சொல்லப்படும் கொல்லிமலைக்கு விசாரணைக்காக போலீசார் சென்றபோது அங்கே ஜெனித் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் எந்த மூலிகை பண்ணையும் இல்லை, மோசடியில் ஈடுபட்ட ஜெகதீசனுக்கு அங்கு எந்த சொத்தும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
பொதுமக்களின் பண ஆசையை பயன்படுத்தி இல்லாத பெயரில் மூலிகை பண்ணை வைத்து பல கோடி மோசடி செய்துள்ளார் ஜெகதீசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக