Viruvirupu
“திவாகரனையும்
ராவணனையும் வெளியே விடலாம். ஆனால், அவர்கள் வெளியே வருவது எந்த
விதத்திலும் மீடியாக்களில் பரபரப்பாக அடிபடக்கூடாது. ஓகேயா?” இப்படியொரு
சாய்ஸ் மன்னார்குடி குடும்பத்துக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு மன்னார்குடி
சின்டிகேட்டின் ரியாக்ஷன் என்ன?
வெளியே வரவேண்டும் என்றால், பெரிய இழப்புகளையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் நினைத்து, ‘கையிருப்புகளை’ பதுக்க வேண்டிய இடங்களில் பதுக்கிய நிலையில், இந்த நிபந்தனை வெரி சிம்பிள். ஆனந்தமாக தலையசைத்தார்களாம்.
அதையடுத்து ‘மே(லி)டத்துக்கு வேண்டப்பட்டவர்களாக தற்போதும் அறியப்பட்ட சசி குரூப் வி.ஐ.பி. ஒருவர் களத்தில் குதித்தார். கையில் ஒரு பட்டியலுடன், மீடியாக்களில் யார் யாரைப் பிடிக்க வேண்டும் என்று செயல்பட்டார். “திவாகரன் மற்றும் ராவணன் ஜாமீனில் விடப்பட்டால், அந்தச் செய்தி அதிகபட்சம் ஒரு பெட்டிச் செய்திக்கு மேல் போகக்கூடாது.. ஓகேயா?” என்று இந்தப் பக்கத்தில் கேட்கப்பட்டது.
வி.ஐ.பி.-யின் கோரிக்கைக்கு பாஸிட்டிவ் பதில் வந்ததாக தெரியவருகிறது. முக்கிய மீடியாக்களில், இப்படியான விஷயங்களை பிளாஷ் செய்யும் 5 பேர் அழைக்கப்பட்டு, அடையார் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மற்றொரு சந்திப்பு நடந்தது. அவர்களது ‘பாஸ்’களின் பர்மிஷனுடன்தான் பேசுவதாக கூறி, இந்த விஷயம் பக்குவமாக கூறப்பட்டது.
ராவணன், திவாகரன் ஜெயிலில் இருந்தபோது, அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவாகியதையே சென்சேஷனல் நியூஸாக பிளாஷ் பண்ணியவர்களுக்கு, திவாகரனோ, ராவணனோ ஜாமீனில் வெளியே வருவதைப் பற்றி அடக்கி வாசிக்க வேண்டும் என்று சொன்னால், கைகளை கட்டிப் போட்டது போலத்தான் இருக்கும்.
ஆனால் என்ன செய்வது? கைகளைக் கட்ட கயிறு கொடுத்த இடம் பெரியது.
அப்படியிருந்தும், “திவாகரனுக்கு எப்படிக் கிடைக்கிறது ஜாமீன்?” என்று பெரிய கேள்விக்குறியுடன் கவர் ஸ்டோரி எழுதிக் கொடுத்த பத்திரிகையாளர் ஒருவர், மறுநாள் தனது எழுத்து அச்சில் வராமல் நீக்கப்பட்டதைப் பார்த்து திகைத்துத்தான் போனார். அவரது நியூஸ் ஸ்டோரி நீக்கப்படுகிறது என்ற விஷயம்கூட அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.
இவ்வளவு முன்னேற்பாடுகளும் நடந்த நிலையில், ‘ஓசைப்படாமல்’ வெளியே, ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார் திவாகரன்.
திவாகரன் எந்த விதத்திலும் வெளியே வரக்கூடாது என்று வந்த உத்தரவின்படிதான், ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் அடுத்தடுத்து போடப்பட்டன. அவர்மீது பதிவானவை மொத்தம் 7 வழக்குகள். அவற்றில் 5 வழக்குகளில் ஒவ்வொன்றாக ஜாமீன் கிடைத்திருந்தது. மற்றைய இரு வழக்குகளும் அவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கவில்லை.
“இந்த இரு வழக்குகளும்கூட அடிபட்டுப் போகலாம், அடுத்த கேஸை தயார் செய்யவா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “வேண்டாம், விட்டு விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற பதில் சென்னையில் இருந்து வந்தது.
அதன்பின், திவாகரனின் வக்கீல் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை, காவல்துறை எதிர்க்கவில்லை. ஒரு நீதிபதி இது குறித்து ஆச்சரியமாக கேள்வி எழுப்பியபோது, அரசுத் தரப்பு வக்கீலிடமிருந்து லேசான சிரிப்பு ஒன்றுதான் பதிலாக வந்தது. அது கேலிச் சிரிப்பு அல்ல, இயலாமையால் ஏற்பட்ட பரிதாபச் சிரிப்பு என்பதை, கேள்வி எழுப்பிய நீதிபதி புரிந்து கொண்டிருக்கலாம். மேற்கொண்டு கேள்வி கேட்காமல் விட்டுவிட்டார்.
கிட்டத்தட்ட 3 மாதங்கள் உள்ளேயிருந்துவிட்டு, வெளியே வந்திருக்கிறார் திவாகரன். ராவணனும் அனேகமாக இன்று வெளியே இருக்க வேண்டும். “எப்படி வருகிறார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்காதீர்கள்” என்று காவல்துறையில் எங்கள் தொடர்பாளர்களே மர்மச் சிரிப்புடன் கூறுகிறார்கள்.
“விட்டு விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொல்லப்பட்டது ஓரளவுக்கு உண்மைதான் என்கிறார்கள், விஷயமறிந்த வட்டாரம் ஒன்றில்! எப்படியென்றால், திவாகரன் இப்போது ஒரு விதத்தில் வெளியே இருந்தாலும், வேறு ஒரு குரூப்பின் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறார். ஹவுஸ் அரஸ்ட் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்.
“சசிகலாவால், சரியான நேரத்தில், சரியான மூவ் எடுத்து எதையும் சாதிக்க முடியும்” என்று கூறுகிறது அவரது ஆதரவு சர்க்கிள். அவர்கள் கூறுவதை ஒப்புக் கொள்ளலாம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக