செவ்வாய், 15 மே, 2012

KODAK லேப் ஒன்றில் தற்செயலாக கிடைத்தது, அணு ஆயுத யூரேனியம்!

viruviruppu.com நியூயார்க் மாநிலம் ராச்செஸ்டரில் அமைந்துள்ள கொடாக் (Kodak) நிறுவன லேப் ஒன்றில், நீண்டகாலமாக இருந்த எந்திரம் ஒன்றில் அணு ஆயுதம் தயாரிக்க உபயோகிக்கப்படும் யூரேனியம் இருப்பது தற்செயலாக தெரியவந்துள்ளது.
1974-ம் ஆண்டுமுதல் இந்த எந்திரம் அங்கு இருப்பதால், அதற்குள் யூரேனியம் இருக்கும் விபரம், தற்போது பணிபுரிந்த யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குமுன் தயாரிக்கப்பட்ட அந்த எந்திரத்துக்குள், சுமார் 1 கிலோ எடையுள்ள, அதி சக்திவாய்ந்த, நேரடி ஆயுத தயாரிப்புக்கு உபயோகிக்கப்படும் யூரேனியம் (weapons-grade highly enriched uranium) எப்படி வந்தது என்பதில் குழப்பங்கள் உள்ளன. போட்டோக்கள் கழுவப்படும் ஆசிட்களை பரிசோதிக்க அந்த எந்திரத்தை, கொடாக் தமது லேபில் உபயோகித்து வந்தது.

இப்போது டிஜிட்டல் போட்டோகிராபி வந்துவிட்ட பின், இந்த எந்திரம் உபயோகிக்கப்படாமல் ஒரு மூலையில் வைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பெட்டி சைஸில் உள்ள இந்த எந்திரத்தை சமீபகாலங்களில் யாரும் பெரிதாகக் கண்டுகொண்டதில்லை.
கொடாக் நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் கிரிஸ்டோஃபர் வெரோன்டா, “எமது ஆவணங்களின்படி இங்கு யூரேனியம் இருப்பதற்கான எந்தப் பதிவுகளும் இல்லை. நீண்ட காலமாக இந்த எந்திரம் இங்கே உள்ளது. அதற்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதில் இங்கே யாரும் அக்கறை கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த எந்திரத்துக்கள் சிக்கலான ‘ஏதோ’ ஒன்று இருப்பது யாருக்கோ தெரிந்திருக்கிறது.
காரணம், 1974-ம் ஆண்டில் இருந்து, இந்த எந்திரம் உபயோகிக்கப்படும் நேரங்களில், அது வைக்கப்பட்டுள்ள அறைக்குள் யாரும் அனுமதிக்கப்பட கூடாது என்று, ஒரு அறிவித்தல் உள்ளது. எதற்காக அனுமதிக்கப் படக்கூடாது? அப்படி என்னதான் அபாயம் அதில் உள்ளது? என்ற கேள்விகளை இதுவரை யாரும் கேட்டதில்லை.
வெப்பன் கிரேட் யூரேனியத்தை பெறுவதற்கு உலக சாடுகள் பல தலைகீழாக முயற்சிகளை மேற்கொள்கின்றன. தீவிரவாத அமைப்புகளின் கைகளில் இவ்வகை யூரேனியம் கிடைத்துவிட கூடாது என்பதற்காக மில்லியன் கணக்கில் செலவு செய்து, நியூகிளியர் ரியாக்டர்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஆனால், நியூயார்க் அருகே ராச்செஸ்டரில், எந்தவித பாதுகாப்பும் அற்ற நிலையில் 1 கிலோ வெப்பன்-கிரேட் யூரேனியம், 40 ஆண்டுகளாக தேடுவாரற்ற நிலையில் இருந்திருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக