10 நாட்களில் ரூ.52 கோடி அள்ளிய கப்பார் சி்ங்: தெலுங்கில் பாக்ஸ் ஆபீஸ் ராணியான ஸ்ருதி ஹாசன்
இந்தியில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்து ஹிட்டான தபாங் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் கப்பார் சிங். சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள இந்த படம் கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. முதல் வாரத்திலேயே ரூ. 42.55 கோடி வசூலாகி பாக்ஸ ஆபீஸில் புதிய சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் வார வசூல் மகதீரா, தூக்குடு ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
இந்நிலையில் படம் ரிலீஸான 10 நாட்களிலேயே ரூ.52.25 கோடி வசூலாகியுள்ளது. இரண்டாவது வாரத்தில் ரூ.9.70 கோடி வசூலாகியுள்ளது. இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் வசூல் ரூ.65 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்காத பவன் கல்யாணுக்கு இந்த படம் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. தெலுங்கில் ஸ்ருதி ஹாசன் நடித்த முதல் 2 படங்கள் ஓடாத நிலையில் கப்பார் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் டோலிவுட்டில் ஸ்ருதியின் மவுசு கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்ருதியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக