புதன், 2 மே, 2012

அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?


தமிழகத்தில் வட இந்தியர்கள் வேலை தேடி வந்த வண்ணம் இருக்கிறார்களே இதற்கு என்னதான் தீர்வு?  
தமிழகத்திற்கு வட நாட்டில் இருந்து தொழில் அதிபர்கள் தொழில் தொடங்கி லாபம் சம்பாதிக்க வரலாம்;   தொழிலாளர்கள் வேலைத் தேடி வாழ்க்கை நடத்த வரக்கூடாதா? 
இது தமிழர்களோடு உறவாடி நல்லபடியா உள்ள போயிகிட்டுதானே இருக்கு...; 

வந்தேறி இந்திக்காரனுக்கு வால் பிடிக்கும் நீ தமிழனா? உன்னை போன்ற துரோகிகளுக்கு தக்க பதிலடி தருவோம்?
-தமிழ்மறவன்.
சென்னை சவுக்கார்பேட்டில் உள்ள சேட்டுகளும் மற்ற வட இந்திய ‘உயர்’ ஜாதி வட்டிக்கடைக்காரர்களும் அகர்வால் பவன் வைத்து தமிழர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கலாம்.
ஆனால், வட இந்திய தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள் இரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்கு தமிழ் நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தா… அவர்களுக்கு எதிரா மட்டும் உன் தமிழ் உணர்வு பொத்துக்கிட்டு பீறிட்டுக் கிளம்பும்….
என்ன உன் பிரச்சினை?
உனக்குத் தேவை அல்வாவா?
போ.. சவுக்கார்பேட் உள்ளபோய் அகர்வால் பவன்  முன்னாடி நின்னுக்கிட்டு உரிமையோடு சொல்லு….
‘தமிழ்நாடு தமிழனுக்குத்தான் சொந்தம்… வந்தேறிகளுக்கு இடமில்லை..’ என்று.
சேட்டு நல்லா குடுப்பான்..
அல்வா..
அவுங்க அடியாள வைச்சி.. அதான் புரட்சித்தலைவியின் போர்படையான காவல்துறை மூலமா..
வாங்கி சாப்ட்டு.. முடிஞ்சா வா…
உள்ள இருக்கறது எல்லாம் பிதுக்கி வெளியே வந்துடும்..
ஆனால், face fresh ஆயிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக