இப்போது அம்மாவி்ன் கைபேசி என்ற புதிய படத்தை இயக்கப் போகிறார் தங்கர். இதில் சாந்தனு நாயகனாக நடிக்கிறார். இனியா நாயகியாக வரப் போகிறார்.
பாக்யராஜின் மகன் என்ற பெருமையுடன்தான் இதுவரை இருக்கிறார் சாந்தனு. சாந்தனுவின் தந்தை பாக்யராஜ் என்று சொல்லும் நாள் இதுவரை அவருக்கு வரவில்லை. நல்ல பிரேக்குக்காக காத்திருக்கு்ம் அவருக்கு தங்கர் படம் கிடைத்திருப்பது பெரும் சந்தோஷம் தந்துள்ளதாம்.
அதேபோல வாகைசூட வா படம் மூலம் மிகச் சிறந்த நடிகையாக உருவெடுத்தவர் இனியா. அடுத்து பாரதிராஜாவின் படம் அவருக்கு கிடைத்தபோதும் கடைசியில் முல்லைப் பெரியாறு பிரச்சினையால் அந்த வாய்ப்பை நழுவ விட்டார் மலையாளத்தைச் சேர்ந்த இனியா.
இந்த நிலையில் இந்த இருவரும் தங்கரின் பொற் கரங்களுக்குள் வந்திருப்பதால் நிச்சயம் தங்களுக்கு இப்படம் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தைப் பெற்றுத் தரும் என்ற பெருத்த நம்பிக்கையுடன் உள்ளனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக