திங்கள், 14 மே, 2012

மாணவியை சீரழித்த ஆசிரியர்! தொடரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க என்ன செய்யலாம்?

விழுப்பரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நெய்வனை கிராமத்தை சேர்ந்தவர் காசிமணி மகள் சாந்தி (வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். அதே பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் நாராயணசெட்டியார் மகன் சங்கர் (வயது 37). இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.மேலும் ஆசிரியர் சங்கர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் டூடோரியல் சென்டரிலும் ஓய்வு நேரஙகளில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாணவி சாந்தி கடந்த2011-ம் ஆண்டு ஜனவரி யில் கணக்கு டிïசனுக்காக அந்த டுடோரியலில் சேர்ந்து ஆசிரியர் சங்கரிடம் கற்று வந்தார்.ஆசிரியர் சங்கர் அப்போது மாணவி சாந்தியிடம், அடிக்கடி ஆசிரியர் சங்கர் தனது வீட்டிற்கு சென்று டியூசனில் படிப்பவர்களுக்கு தண்ணீர் எடுத்து கொண்டு வரசொன்னதோடு, வீட்டில் சிறுசிறு வேலைகளை செய்ய செய்துள்ளார். இந்தநிலையில் ஆசிரியர் சங்கர், மாணவி சாந்தியிடம், தான் அவளை காதலிப்பதாகவும் மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியும், அவரை ஏமாற்றியும் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி சாந்தி கர்ப்பமடைந்தார் , இது பற்றி மாணவி சாந்தி , ஆசிரியர் சங்கரிடம் தெரிவித்தார். அவர் விழுப்பரத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் சாந்தியை அழைத்து சென்று அங்கு அவருக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். அதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்யச் செர்ல்லி ஆசிரியர் சங்கரிடம், சாந்தி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சாந்தியை மேல்மருத்துர் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். சாந்தியை கடந்த 6-தேதி சங்கர் தன்வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.அப்போது அங்கு வீட்டில் இருந்த சங்கரின் மனைவி உமா மற்றும் தாயார் ஆகியோர் சாந்தியை தாக்கியதோடு ஜாதி பெயரை சொல்லி அடித்து விரட்டியுள்ளனர். இதையடுத்து ஆசிரியர் சங்கர், மாணவி சாந்தியை இருசக்கர வாகன்த்தில் அழைத்துக்கொண்டு உளுந்துபேட்டை ரோட்டில் இறக்கிவிட்டு இனி என் பக்கம் வரக்கூடாது என்று சொல்லி மிரட்டியுள்ளார்.பின்னர் தனது பெற்றோர்களையும் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு போலீசில் புகார் கொடுத்தார் சாந்தி. சாந்திஅளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவநேசன் வழக்கு பதிவு செய்ய உளுந்தூர்பேட்டை மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெ'டர் சுமதி, ஆசிரியர் சங்கர் மற்றும் அவரது மனைவி உமா உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.இந்த நிலையில் மாணவி சாந்தி தன்னை கற்பழித்ததாக புகார் கூறிய ஆசிரியர் சங்கர் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதுபோன்ற சம்பவங்கள் சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் பொன். இளங்கோவன் நக்கீரன் இணையதள நிருபரிடம் கூறும்போது,காதலில் வெற்றி பெற முடியாதவர்கள், மனைவியிடம் முழுமையாக சுகத்தை அனுமதிக்க முடியாதவர்கள்,இப்படிப்பட்டவர்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டு, அதன் விளைவு தனது கீழ் பணிபுரியும் பெண்களை, அல்லது இதுபோன்று ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவிகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி வரமுறையற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற செயல்கள் கல்வித்துறையில் அடிக்கடி நடப்பதாக கேள்விபடுவது கவலையளிக்கிறது. இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டம், நீதி மூலம் தண்டனை அளிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த போக்கை மாற்றி அமைக்க வேண்டுமானால், ஒரு மனநல மருத்துவர், பொது மருத்துவர், சமுதாயத்தின் மதிப்பு மிக்க மனிதர், ஆன்மீகத்தில் புலமை பெற்றவர்கள், சமூக சிந்தனையாளர்கள் இப்படிப்பட்டவர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து இந்த குழு வட்டார அளவில் தமிழகம் முழுவதும் அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து பணி செய்யும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். மேலும் ஆங்காங்கே சின்ன சின்ன சம்பங்கள் உருவாகும்போதே இக்குழுச் சென்று ஆய்வு செய்து அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். பள்ளி மாணவ மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் அநீதிகளை உடனுக்குட்ன் பெற்றோர்களிடமோ, நண்பர்களிடமோ,உறவினர்களிடமோ தெரியப்படுத்த வேண்டும். முந்தைய காலங்களை விட சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தற்போது விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது. ஆகவே இப்படிப்பட்ட செயல்களை முன்கூட்டியே தடுக்கலாம். இக்குழுக்கள் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கையின் பேரில் முற்றிலும் தவறான செயல்களை தடுத்து நிறுத்த முடியும். பெற்றோர்களும் பணம் பணம் அலையாமல் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், அவர்களின் நடவடிக்கைக, மாற்றங்களை கண்காணித்து அதில் சந்தேகம் ஏற்பட்டால் பக்குமாக எடுத்துக் கூறினால் விரும்பதகாத செயல்களில் ஈடுபடுவோரிடம் இருந்து காப்பாற்ற முடியும் என்றார்.

சமூக ஆர்வலரும், பாதிக்கப்பட்ட மாணவி தரப்பு வழக்கறிஞருமான லூசி கூறுகையில்,

நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள்தான் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு பள்ளியில் பாதுகாப்பு இல்லை.

இப்படிப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்களை அரசு தேர்வு செய்யும்போது, வெறும் கல்வித் தரத்தை மட்டும் பார்க்காமல், அவர்களது ஒழுக்கம், பண்பாடு, கண்ணியம் இவைகளையும் ஆய்வு செய்து நியமிக்க வேண்டும். பெண்கள் பள்ளிகளில் அதிக அளவில் ஆண் ஆசிரியர்களை நியமிப்பதை குறைத்து, பெண் ஆசிரியர்களை நியமிப்பதை அதிகரிக்க வேண்டும். சட்டத்தின் படி நடவடிக்கை ஒரு பக்கம் எடுத்தாலும், அரசு இதுபோன்ற கீழ்த்தரமான
செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக