வியாழன், 3 மே, 2012

பெங்களூரு வழக்கு: சசிகலா விரைவில் ஹாஸ்பிடல் போகலாம்!

Viruvirupu,
பெங்களூருவில் நடைபெறும் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, ஒரு ஸ்கூல் டீச்சர் போல அட்டென்டன்ஸ் எடுக்கும் நிலையில் உள்ளார். விசாரணைக்கு யார் இன்று வருவார்கள், யார் மட்டம் போடுவார்கள் என்பதை குறித்து வைத்துக் கொள்வதற்கே அவருக்கு நேரம் சரியாக போய்விடும் போலிருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன், மனு மேல் மனுப் போட்டு கேஸை தாமதமாக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியிருந்தார். இறுதியில் நீதிபதியும், அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யாவும் கடுமையான வார்த்தைகள் சிலவற்றைச் சொன்னதில், சசிகலா இப்போதெல்லாம் தவறாமல் ஆஜராகி விடுகிறார்.

இப்போது மற்றையவர்கள் மட்டம் போடத் துவங்கியுள்ளனர்.
இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள ஜெயலலிதா, மாநில முதல்வர் என்ற முறையில் பணிபுரிய வேண்டியிருப்பதை காரணம் காட்டி, விசாரணையில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி கிடைத்தது. அத்துடன் அவருக்கான கேள்விகளுக்கு ஏற்கனவே அவர் பதில் அளித்தும் விட்டார்.
நேற்றைய விசாரணையின்போது, சுதாகரனும் (3-வது குற்றவாளி) இளவரசியும் (4-வது குற்றவாளி) கோர்ட்டுக்கு வந்து சேரவில்லை. அவர்களது வக்கீல்கள் மட்டும் வந்தார்கள்.
“விசாரணைக்கு வரவேண்டிய இருவரும் எங்கே?” என்று நீதிபதி கேட்க, சுதாகரனின் வக்கீல் மூர்த்திராவ், “சென்னையில் இருந்து வந்த விமானம், 4 மணி நேரம் தாமதம் ஆனதால் சுதாகரனால் வர முடியவில்லை” என்றார். இளவரசியின் வக்கீல் அசோகன்,  “இளவரசிக்கு சர்க்கரை நோய் இருப்பதால் ஓய்வு எடுக்கும்படி டாக்டர் கூறி உள்ளார். அதனால் வர முடியவில்லை” என்று காரணம் தெரிவித்தார்.
இப்படியான காரணங்களுக்கு நீதிபதியால் என்ன சொல்ல முடியும்? “இருவருக்கும் இன்று ஒரு நாள் அனுமதி அளிக்கிறேன். நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும்” என்று கூறிவிட்டு, சசிகலாவிடம் கேள்விகளை கேட்கத் துவங்கிவிட்டார்.
சசிகலா ஏற்கனவே 591 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். நேற்று மேலும் கேள்விகள் மாலை 4.30 மணிவரை தொடர்ந்தன.
சசிகலா விரைவில் ஹாஸ்பிடல் ஒன்றில் அட்மிட் ஆகலாம் என்பதாக ஒரு கதை அடிபடுகிறது. சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹாஸ்பிடலில், ஒரு வி.ஐ.பி. தங்குவதற்கான சில ஏற்பாடுகள் செய்யப்படுவதாக ஒரு தகவல் உள்ளது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக