முல்லைப் பெரியாறு தீர்ப்பு தமிழகத்திற்கு ஆதரவாக
வந்துள்ளது என்றும் கேரளாவை சேர்ந்த நீதிபதி கே.டி.தாமஸ் கேரளாவிற்கு
துரோகம் செய்து விட்டார் என்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சரான
பி.ஜே.ஜோசப், கடுமையாக விமர்சித்து கேரள மக்களை நீதிபதி தாமசுக்கு எதிராக
தூண்டி விட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு
அணையின் பலம் குறித்து ஆராய முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில்
ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அதில் தமிழகம் சார்பாக முன்னாள்
நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்
ஆகியோர் இடம் பெற்றனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நீதிபதி தாமஸ்,
“அறிக்கையில் திருப்தி இல்லை என்றால்
அதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் ஐவர் குழு மூலம்தான் புகார் தெரிவிக்க
வேண்டும். ஜோசப் சொல்வதைக் கேட்டு்ச செய்வதற்காக என்னை உச்சநீதிமன்றம்
நியமிக்கவில்லை. ஜோசப் கட்டுப்பாட்டோடு பேச வேண்டும்.
முதலில் அவர் அறிக்கையை முழுமையாக படிக்க
வேண்டும். அதன் பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும். மாறாக மக்களின்
உணர்வுகளை, கோபத்தைத் தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளார். இது தவறானது.
நான் நீதிபதி. இரு மாநிலங்களுக்கும்
பொதுவானதைத்தான் நான் சொல்லியுள்ளேன். என்னை கேரளாக்காரன் என்றோ,
தமிழ்நாட்டுக்காரன் என்றோ கூறுவதில் அர்த்தம் இல்லை” என்று ஆணித்தரமாக
பேசியுள்ள நீதிபதி தாமசுக்கு நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக