செவ்வாய், 8 மே, 2012

லாட்டரி அதிபர் மார்ட்டின் சிறையில் இருந்து விடுதலை!

கோவை: லாட்டரி அதிபர் மார்ட்டின் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
கோவையை சேர்ந்த மார்ட்டின் மீது நில அபகரிப்பு, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை உள்பட அடுத்தடுத்து 14 வழக்குகளை போலீசார் தொடர்ந்தனர். இந்த 4 வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்பு, இவர் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தை பாய்ச்சி மீண்டும் கைது செய்தனர்.

இந்த நிலையில், மார்ட்டினை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தன் மீது போட்டப்பட்ட 13 வழக்குகளில் ஜாமீன் பெற்ற மார்ட்டின், கடைசியாக, கொடுமுடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பதிவான வழக்கில், கொடுமுடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் பெற்றார்.
இந்த ஜாமீன் உத்தரவை மார்ட்டினின் வழக்கறிஞர்கள் கோவை மத்திய சிறையில் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 7 மாதங்களுக்கு பிறகு கோவை சிறையில் இருந்து மார்டின் விடுதலை செய்யப்பட்டார்.
இவரை விடுவிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று மிரட்டி ஆளும் கட்சியின் பெயரைச் சொல்லியும் போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லி பலரும் தன்னிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்து வருவதாக மார்ட்டினின் மனைவி லீமா புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்டினுக்குச் சொந்தமானது தான் பிரபல மியூசிக் சேனலான எஸ்எஸ் டிவியாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக