சென்னை, மே 12: திமுகவினரை வழக்குகள் போட்டு யாரும் வீழ்த்த முடியாது என்று
திமுக தலைவர் கலைஞர் கூறினார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக வழக்குரைஞர்கள் கூட்டத்தில் கருணாநிதி
பேசியதாவது:
முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உள்பட திமுகவினரை மீளாத சிறைச்சாலைக்கு
அனுப்ப வேண்டும் என்ற கெடு நினைப்போடு ஜெயலலிதா அரசு செயல்பட்டு வருகிறது.
பழிவாங்கும் எண்ணத்தோடு அதிமுக அரசு செயல்படுவதைப் பார்க்கும்போது
வேதனையளிக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நேருவின் சகோதரர் ராமஜெயம் கோரமாகக்
கொல்லப்பட்டார். இன்னமும் அந்தக் கொலை யாரால், எப்படித் திட்டமிடப்பட்டு
நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.
நாட்டில் நெருக்கடி நிலை இருந்தபோது சிறைச்சாலையில் எதிர்ப்பாளர்களை
காவல்துறையினர் அடித்து நொறுக்கினர். அந்தக் காவலர்கள் மீது பதிலுக்கு நாம்
அரசியல்ரீதியாக எதுவும் செய்யாவிட்டாலும் அவர்கள் தங்கள் செயலுக்கான பலனை
அனுபவித்தனர். இனியாவது காவல் துறையினர் தங்கள் நிலை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இப்போது போடப்பட்டுள்ள வழக்குகள் எல்லாம் சாதாரணமானவை. இந்த வழக்குகளை வைத்து
திமுகவை வீழ்த்திவிட முடியாது என்றார் கலைஞர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக