ஞாயிறு, 27 மே, 2012

மணமகன் தற்கொலை ஜோசியரால் முதலிரவு தள்ளிப்போனதால்

சென்னை: ஜாதகத்தில் கட்டம் சரியாக இல்லை என்றுகூறி முதலிரவை தள்ளிப் போடுமாறு ஜோசியர் கூறி வந்ததால் அதிருப்தி அடைந்த புது மாப்பிள்ளை ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து விட்டார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பாலாஜி. 22 வயதேயான இவர் மின்சார ரயிலில் முறுக்கு விற்று வந்தார். அதே போல ரயிலில் முறுக்கு விற்று வந்த ஒரு பெண்ணுக்கு பாலாஜியைப்ப பிடித்துப் போக தனது மகள் சித்ராவை அவருக்கு மணமுடித்து வைக்க விரும்பினார். பாலாஜியும் சம்மதம் தெரிவிக்கவே, சித்ராவுக்கும் அவருக்கும் கடந்த 18ம் தேதி கல்யாணம் நடந்து முடிந்தது.

கல்யாணம் முடிந்ததும் வழக்கமான புது மாப்பிள்ளைகள் போல முதலிரவுக்கு ஆர்வத்துடன் தயாரானார் பாலாஜி. ஆனால் ஜோசியர் ரூபத்தில் அவருக்கு டென்ஷன் வந்து சேர்ந்தது. பாலாஜியின் ஜாதகத்தைக் கணித்த அவர், அதில் கட்டம் சரியாக இல்லை என்று கூறிய ஜோசியர் முதலிரவைத் தள்ளிப் போடுமாறு கூறியுள்ளார். இப்படியே 2 நாட்களாகி விட்டது.
கல்யாணமாகி 2 நாளாகியும் முதலிரவு நடக்கவில்லையே என்று டென்ஷனிலும், கவலையிலும் இருந்து பாலாஜிக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் மறுபடியும் கட்டம் சரியில்லை, முதலிரவு வேண்டாம் என்று ஜோசியர் கூறிய தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் விரக்தியில் தனது வீட்டு உத்தரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு விட்டார். தான் கட்டியிருந்த கல்யாண பட்டு வேஷ்டியிலேயே அவர் தூக்கில் தொங்கிப் பிணமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக