திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை
செய்யப்பட்ட வழக்கில் இன்னும் துப்பு துலங்காதது ஏன் என்று திமுக தலைவர்
கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் திமுக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்
.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திமுகவினர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை எதிர்கொள்வது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் திமுகவினர் மீதான பொய்வழக்குகளை எதிர்த்து வழக்குத் தொடருவது, பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு பெற்றுத் தருவது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதற்கு சாட்சி என்றார். மேலும் திருச்சி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஒரு மாத காலத்துக்கும் மேலாகியும் இன்னும் துப்பு கூட துலங்கப்படாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக