வெள்ளி, 4 மே, 2012

நம்புவோம் நம்புவோம்?? நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை: மதுரை ஆதீனம் ஐகோர்ட்டில் பதில்

மதுரை ஆதீனத்தை ஆஜர்படுத்தக்கோரிய வழக்கில், "நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை', என அவர் மதுரை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 
மதுரை தர்மபுரம் ஆதீன மடம் மேலாளர் குருசாமி தேசிகர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: நித்யானந்தா, மதுரை ஆதீனத்தை மிரட்டி, தன்னை அடுத்த ஆதீனமாக அறிவிக்கச் செய்துள்ளார். நித்யானந்தாவின் முழுக் கட்டுப்பாட்டில் மதுரை ஆதீனம் உள்ளார். மதுரை ஆதீனம் சுயமாக முடிவு எடுக்கவில்லை. அவரை சட்டவிரோத காவலில் நித்யானந்தா வைத்துள்ளார். மதுரை ஆதீனத்தை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நேற்று, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், டி.ஹரிபரந்தாமன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மதுரை ஆதீனம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம்: நான், நித்யானந்தா உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும், சட்டவிரோத காவலிலும் இல்லை. தினமும் பக்தர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். மடத்தை நிர்வகிக்க, சரியான அடுத்த ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. நான் வெளிநாடு செல்ல திட்டமிடவில்லை. மனுதாரர் யாரென்று எனக்குத் தெரியாது. அவர் பிறர் தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையான குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்துள்ளார். சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகள் விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.
நம்புவோம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக