எங்க அப்பா பெருமளவில் பண மோசடி செய்துள்ளார்-பிசிசிஐ சீனிவாசன் மகன் புகார்
மும்பை: எனது தந்தையும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான என்.சீனிவாசன் பெருமளவில் பண மோசடி செய்துள்ளார் என்று சீனிவாசனால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அவரது மகன் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.
அஸ்வின் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர் என்று கூறப்படுகிறது. இவரது நண்பர் அவி முகர்ஜி. இருவரும் நெருங்கிப் பழகி வருகின்றனர். மும்பையில் சேர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். தாங்கள் கல்யாணம் செய்து கொண்டதாகவும் முன்பே அறிவித்தவர் அஸ்வின். சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு பாருக்கு 'தண்ணீர் குடிக்க'ச் சென்றபோது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் அஸ்வின்.இந்த நிலையில்தனது தந்தை மீது சரமாரியாக புகார்களைக் கூறி வருகிறார் அஸ்வின். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா சிமென்ட்ஸ் அதிபரான எனது தந்தை சீனிவாசன் என்னை நீண்ட காலமாக கொடுமைப்படுத்தி வந்தார். என்னிடம் உள்ள ஹோமோசெக்ஸ் பழக்கத்திலிருந்து விடுவிப்பதாக கூறி இந்த சித்திரவதைகளை செய்து வந்தார்.
எனது தந்தைக்கு இந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் வழியாக பெருமளவில் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி வருகிறார். இதன் மூலம் பெருமளவில் அவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளார். என்னிடம் இதுதொடர்பாக ஏதாவது அரசு விசாரணை அமைப்புகள் தகவல் கோரி அணுகினால் தரத் தயாராக இருக்கிறேன். உரிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
எப்படியெல்லாம் எனது தந்தை கருப்புப் பணத்தை நாட்டுக்குள் புழங்க விட்டுள்ளார் என்பதை நான் புட்டுப் புட்டு வைப்பேன்.
எனது தந்தைக்குச் சொந்தமான ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்து ஸ்பின் என்ற நிறுவனத்திற்கு வெளிநாட்டைச் சேர்ந்த ப்ளூ தார்ன் என்ற நிறுவனம் பெருமளவிலான கருப்புப் பணத்தை டெபாசிட் செய்துள்ளது. யாராவது இந்து ஸ்பின் நிறுவனக் கணக்கையும், ப்ளூ தார்ன் நிறுவன கணக்கையும் சோதனையிட்டால் இது தெரிய வரும்.
ஒரு சமயம், 2.75 லட்சம் டாலர் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். இது முழுக்க முழுக்க கருப்புப் பணமாகும்.
நானும் அவி முகர்ஜியும் நெருங்கிப் பழகி வருவது எனது தந்தைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதை மனதில் வைத்துத்தான் போலீஸாரைத் தூண்டி விட்டு நானும், அவியும் மும்பை ஹோட்டல் ஒன்றுக்குப் போயிருந்தபோது கலாட்டா செய்ததாக கூறி கைது செய்ய வைத்தார் எனது தந்தை.
இது நாள் வரை எனது தந்தையின் கொடுமைகளை சகித்துக் கொண்டேன். இனிமேல் பழிக்குப் பழி வாங்குவேன். கடந்த பல வருடங்களாக என்னை சித்திரவதை செய்ததற்கு எனக்கு எனது தந்தை நஷ்ட ஈடு வழங்க வேண்டும். எனது பார்ட்னர் அவியும் சேர்ந்து அவரால் சிரமப்பட்டு விட்டார் என்றார் அஸ்வின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக