செவ்வாய், 22 மே, 2012

அமெரிக்கா: ஹோமோ.. மாணவன் தற்கொலை- தமிழக மாணவருக்கு 30 நாள் சிறை

 Webcam Spying Case Indian Student Gets 30 Day Jail Term
நியூயார்க்: சக மாணவரின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த அமெரிக்கா வாழ் தமிழக மாணவரான தருண் ரவிக்கு 30 நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தருண் ரவி (வயது 20) கடந்த 2010ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்தார். அந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்தார்.
தருண் ரவியின் அறையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டெய்லர் கிளமென்டி என்ற மாணவரும் தங்கி படித்து வந்தார். இவர் வேறு நபருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை தருண் ரவி தனது வெப் கேமரா மூலம் அவருக்கு தெரியாமல் படம் பிடித்தாகவும், அது குறித்து `டிவிட்டர்' இணையதளத்தில் தகவல் வெளியிட்டதாகவும் புகார் கூறப்பட்டது.அந்த வீடியோ படத்தை பார்த்து மனவேதனையும், அவமானமும் அடைந்த கிளமென்டி தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து தருண் ரவி மீது நியூஜெர்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் கடந்த 16ம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் தருண் ரவிக்கு 30 நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தருணின் தந்தை ஒரு சாப்ட்வேர் என்ஜினியர். இவர் 15 ஆண்டுகளுக்கு முன், அவரது மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.

2010ம் ஆண்டு 18 வயது நிரம்பிய தருண் ரவி ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக