திங்கள், 16 ஏப்ரல், 2012

Tamil Audio sale AR.Rahman Ilayaraja Haris jeyaraj

தற்போது தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமம் தான் அதிக விலைக்கு செல்கிறது. இவருக்கு அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது இளையராஜா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அவர் இப்போது இசையமைத்து வரும் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமம், ஒரு கோடி ரூபாய்க்கு சென்றுள்ளது. இது ஹாரிஸ் இசையமைக்கும் படங்களின் உரிமையை விட அதிக தொகையாகும். இதனால் ரஹ்மானுக்கு அடுத்த இடத்திற்கு இளையராஜா வந்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் 3ம் ‌இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக