செவ்வாய், 24 ஏப்ரல், 2012

Priyanka Chopra 9C,Vidhya Balan 7C,kareena Kapoor 5C கதாநாயகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்

பிரியங்கா சோப்ரா இதுவரை ஒரு படத்துக்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி வந்தார். அடுத்து நடிக்க உள்ள புதிய படத்துக்கு ரூ. 9 கோடி வாங்குகிறார். வித்யபாலனுக்கு இது வரை ரூ. 1 1/2 கோடியில் இருந்து ரூ. 2 கோடி வரை சம்பளம் நிர்ணயித்து இருந்தனர். கடந்த வருடம் அவர் நடித்து ரிலீசான “டர்டி பிக்சர்” படம் வெற்றிகரமாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது சம்பளத்தை ரூ. 7 கோடியாக உயர்த்தி உள்ளார்.
 கரீனா கபூர் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அத்துடன் படத்தின் லாபத்திலும் பங்கு கேட்கிறார். கதாநாயகர்கள்தான் லாபத்தில் பங்கு வாங்கி வந்தனர். ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார் போன்றோர் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வாங்குகின்றனர். அதனை கரீனா கபூரும் பின்பற்றுகிறார்.

அவர் நிபந்தனையை ஏற்காத படங்களில் நடிக்க மறுத்து விடுகிறார். கரீனாகபூர் நடித்து ரிலீசான 3 இடியட்ஸ், கோல்மால், பாடிகார்ட், ராஒன் படங்கள் வசூல் குவித்தன. எனவே தான் புதிதாக நடிக்கும் ஹீரோயின் படத்தில் நடிப்பதற்கு சம்பளத்தோடு லாபத்தில் பங்கு வேண்டும் என்று நிபந்தனை போட்டுள்ளார்.
கத்ரினா கையூப் சம்பளத்தை 3 1/2கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தியுள்ளார். நடிகைகள் முடிவால் கதாநாயகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அவர்கள் கதாநாயகிகளை பின்னுக்கு தள்ள தங்கள் சம்பளத்தை மேலும் உயர்த்த ஆலோசிக்கின்றனர்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக