புதன், 4 ஏப்ரல், 2012

Nayanthara: மனித வாழ்க்கையில் பிரிவு என்பது சாதாரணமான விஷயம்

நடிகை நயன்தாரா நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபடியும் திரைபடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை எந்த செய்திக்கும் செவி சாய்க்காத நயன்தாரா தானாகவே பிரபுதேவாவை பிரிந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.தேவையில்லாமல்தன்னை பற்றி மற்றவர் பேசுவதை விரும்பாததால் உண்மையை உலகம் அறிய இது தான் நேரம் என்று முடிவெடுத்த நயன்தாரா “மனித வாழ்க்கையில் பிரிவு என்பது சாதாரணமான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனை இருக்கும்.அந்த சிந்தனைகள் ஒத்துப் போகவில்லை எனும் போது பிரிந்துவிடுவது தான் நல்லது. என் தனிப்பட்ட விஷயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய நிலையில் நானில்லை.  இருந்தாலும் உண்மை உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காத் தான் சொல்கிறேன். அவருடன் செல்லும் போது நூறு சதவீத நம்பிக்கையுடன் தான் சென்றேன்."அந்த மூன்றரை வருட வாழ்க்கை என்னை மிகவும் மாற்றிவிட்டது. அதனால் தான் அதிலிருந்து மீண்டு வருவதற்கு இத்தனை நாட்கள் ஆனது. நான் நடிப்பதை கைவிட்ட போது காதலுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையிலும் இருந்தேன். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது.சிலர் சொல்வது போல் பிரபுவின் பெயரை என் கையில் இருந்து அழிக்கும் எண்ணத்தில் நான் இல்லை” என்று தனது அனைத்து கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டார் நயன்தாரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக