ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

Narendra Modi:பார்ப்பனர்தான் இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்றி வளர்த்தார்கள்

சூரத், ஏப்.28- இந் தியக் கலாச்சாரத்தை யும், சாஸ்திரங்களையும் காப்பாற்றி வளர்த்தவர் கள் பார்ப்பனர்கள்தான் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறி னார். சூரத் நகரில் பிரம்ம சமாஜ அமைப்பு ஏற் பாடு செய்து நடத்திய பார்ப்பன சம்மேளனத் தில்  24 ஆம் தேதி பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இந்தியக் கலாச் சாரத்தைக் கட்டிக் காக்க பார்ப்பன சமூகம் உதவியது. நமது கலாச் சாரம் இன்னமும் அழி யாமல் இருக்கிறதென் றால், அதற்குக் காரணம் பார்ப்பனர்கள்தான். பல நூற்றாண்டு காலமாக அவர்கள் ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலை முறைக்கு அறிவைத் தொடர்ந்து அளித்து வந்துள்ளனர். இது அவர்கள் சமூகத் திற்குச் செய்த மாபெரும் சேவையாகும் என்று அவர் கூறினார்.
ஒரு வழியில் துப் பாக்கியின் மூலமாகவும்; மற்றொரு வழியில் சாஸ் திரங்கள் (அறிவு) மூல மாகவும் சமூக நடை முறை உருவாக்கப்பட லாம்.
துப்பாக்கியின் மூலம் உருவாக்கப்பட்ட சமூக நடைமுறை நீண்ட காலம் உயிர்வாழாது. அறிவின் மூலம் உரு வாக்கப்படும் சமூகம் நீண்ட காலம் நீடித்திருக் கும். அமைதியும், வள மும் நிறைந்த ஒரு சமூ கத்தை உருவாக்க பார்ப் பனர்கள் இன்று வரை பணியாற்றி வருகின் றனர் என்று மோடி கூறினார்.
கல்வி நடைமுறை வளர்ச்சி பெற காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். கடந்த 40 ஆண்டு காலத்தில் மக் களை ஜாதி, இனம், மதம் அடிப்படையில் காங் கிரஸ் பிளவு படுத்தியுள் ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கோயில் நிருவாகத் துக்கான இந்திய கல்வி நிறுவனம் (Indian Institute of  Temple Management)    ஒன்றை நாம் அமைத்திருக்கிறோம். உலகெங்கும் உள்ள கோயில்களில் பணி யாற்றும் பூசாரிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப் படும் என்று அவர் கூறினார்.

சமஸ்கிருதம் கற்பிக்க

ஸ்வார்மின் குஜராத் திட்டத்தின் கீழ் 1 லட்ச இலக்கை விட அதிக மாக 1.5 லட்சம் ஆசிரி யர்களுக்கு சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டுள்ளது என்று மோடி கூறினார்.
பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று ஒரு சொலவடை உண்டு. அது போல் மாபெரும் உண்மையை மறைக்க நரேந்திர மோடி முயல்கிறார். தங்களின் வேத சாஸ் திரங்களின் அடிப்படை யில் மக்களிடையே ஜாதிப் பிரிவினையை ஏற்படுத்தியவர்களே பார்ப்பனர்கள்தான். அதற்கு காங்கிரசை ஏன் அவர் குற்றம் சாட்டு கிறார்? சமஸ்கிருத மொழி மட்டும்தான் இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் என்று மோடி நினைக்கிறார் போலும். சமஸ்கிருத மொழியை வளர்த்து, அதன் மூலம் இந்தியக் கலாச்சாரத்தையே பார்ப்பனர்கள் காப் பாற்றி வளர்த்தார்கள் என்று கூறுவது எத் தகைய புளுகுமூட்டை?
பேச்சு வழக்கற்ற ஒரு மொழியைப் பெருமைப் படுத்தியே தங்களையும் பெருமைப்படுத்திக் கொள்ளும் பார்ப் பனர்களைக் கண்டு மோடி போன்ற பார்ப் பனர் அல்லாத மக்கள் வியந்து பாராட்டும் போலித்தனம் என்று தான் மாயுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக