ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

Facebook வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது மும்பையில் அழகு நிலையம் நடத்தி வருபவர் மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வெளிநாட்டில் வேலை தேடி பக்ரைனின் உள்ள பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் பக்ரைனில் வேலை செய்து வரும் அனீஷ் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் இணையதள பேஸ் புக் மூலம் அறிமுகம் ஆனார்.வெளி நாட்டில் வேலை அதிக பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி கரமான வாக்குறுதிகளை நம்பிய அந்த பெண், வாலிபர் அனீசை முழுமையாக நம்பினார்.இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு திருவனந்தபுரத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வருமாறும் அழைப்பு விடுத்தார் அனீஷ். அதன்படி மும்பையில் இருந்து திருவல்லாவில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்து பின்னர் திருவனந்தபுரத்திற்கு வந்த அந்த பெண்ணை கிளிமானூரில் இறங்கி நிற்குமாறு கூறிய அனீஷ், தனது நண்பர் களான தினேஷ் மற்றும் சுரேசுடன் காரில் சென்று அந்த பெண்ணுடன் பொன்முடி சென்றனர்.அங்கு வாடகைக்கு அறை கிடைக்காததால், கல்லரை எனும் ஊரில் உள்ள நண்பர் சுரேசின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த பெண்ணை, சுரேசும், அனீசும் கற்பழித்தனர்.
அடுத்த நாள் திருவனந்தபுரம் வந்த அவர்கள் நேர் முகத்தேர்வுக்கு அரபு நாட்டில் இருந்து ஆள் வராததால் தேர்வு நடைபெறவில்லை என கூறி அந்த பெண்ணை திருப்பி அனுப்பிவிட்டனர்.இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அனீசும், சுரேசும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கற்பழிப்பு காட்சிகளை படம் எடுத்து உள்ளதாகவும், அதை இன்டர்நெட் மூலமாக வெளியிடப்போவதாகவும் கூறி அந்த பெண்ணை மிரட்டி ரூ.21/2 லட்சத்தை அபகரித்து விட்டனர். மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனம் நொந்த அவர் தனது கணவரிடம் இதுபற்றி விவரம் தெரிவித்தார்.நிலைமையை புரிந்து கொண்ட அவரது கணவர் மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நெடுமங் காடு துணை போலீஸ் சூப்பி ரண்டு கே.முகமதுவுக்கு டி.ஜி.வி. உத்தரவிட்டார்.அதன் பேரில் பொன்முடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பப்டு, பாலோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் விசாரணை நடந்து வந்தது.இந்த நிலையில் அனீஷ், சுரேசிற்கு அனைத்து வகையிலும் உதவி செய்த கல்லரை குற்றிமூடு தினேசை போலீசார் கைது செய்தனர். கைதான தினேசிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக