வியாழன், 26 ஏப்ரல், 2012

Chithra Subramaniam:போபர்ஸ்: குவாத்ராச்சிக்கு லஞ்சம் தரப்பட்டது ஏன்?

டெல்லி: போபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் ரூ. 64 கோடி லஞ்சம் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த முன்னாள் இந்து பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டு வர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உதவியாக இருந்த ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துள்ளார்
Veteran journalist Chitra Subramaniam -- who blew the whistle on the infamous kickback deal on the Bofors guns, leading to the defeat of the Congress party in the 1989 general elections, and won her the 1990 Asian award for excellence in journalism -- at her office in New Delhi on March 30, 1990.

அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

லின்ட்ஸ்ட்ராமின் இந்தக் கருத்தை ஆதரித்துள்ள சித்ரா சுப்பிரமணியம் வேறு சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். சித்ரா கூறுகையில், ராஜிவ் காந்திக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால், இந்திய ராணுவத்துக்கு தனது பீரங்கிகளை விற்க போபர்ஸ் நிறுவனம் ஏன் ரூ. 64 கோடியை லஞ்சமாக தர வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை யோசிக்க வேண்டும்.

இத்தாலியைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாத்ராச்சிக்கு எதற்காக போபர்ஸ் பணம் தந்தது?. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விசாரணையில் சோனியா காந்தியையும் சேர்த்திருக்க வேண்டும். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் இந்த லஞ்சம் தரப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரிய வந்திருக்கும்.

மேலும் போபர்ஸ் ஊழலை மறைக்க இந்தியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் பல்வேறு மட்டங்களில் முயற்சிகள் நடந்தன.

எதற்காக குவாத்ராச்சிக்கு லஞ்சம் தந்தோம் என்பது குறித்து ஸ்டென் லின்ட்ஸ்ட்ராமிடம் போபர்ஸ் நிறுவன அதிகாரி மார்ட்டின் ஆர்ட்போ நிச்சயமாக பல தகவல்களைத் தெரிவித்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.

மேலும் இந்த விவகாரத்தில் அமிதாப்பச்சனையும் சேர்க்குமாறு எனக்கு பலவித நெருக்கடிகள் வந்தன. ஆனால், அதை நான் ஏற்கவில்லை என்றார்.

இதன்மூலம் குவாத்ராச்சிக்கு லஞ்சம் தரப்பட்டதற்கான பின்னணியில் சோனியா இருக்கிறார் என்பது போன்ற கருத்தை சித்ரா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக