திங்கள், 2 ஏப்ரல், 2012

அட்ற .......அட்ற...... நாக்கு முக்கு ... நாக்கு முக்கு .... நாக்கு முக்கு ..அட்ற

வாசகர் கடிதம் 1 
 நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது தான். இருவரும் மீண்டும் சேர்ந்து தோட்டத்தில் பூ பறிக்க தொடங்கி விட்டார்கள். இனி எல்லோர்க்கும் இருவரும் சேர்ந்து பூ சுற்றுவார்கள்? ஒன்றுமே உருப்படாது

வாசகர் கடிதம்2அப்பாடா... இந்த மூணு மாச கேப்ல எவனவன் சசிகலா குரூப்புக்கு எதிரா வேல செஞ்சான்னு குவிஞ்சுருக்கற புகார் கடிதம் மூலமா தெரிஞ்சாச்சு... எவ்வளோ நாளைக்குதான் ஐஏஎஸ் ஸ மாத்தறது, ஐபிஎஸ் ஸ மாத்தறது, மந்திரிய மாத்தறது ன்னு பழகிப்போன காரியத்தையே செய்யறது? இனிமே உலக கட்சி வரலாற்றுலேயே ஒரே அடியாக இருபது லட்சம் கட்சி தொண்டர்களை கட்சி ஒழுங்கு நடவடிக்கை மூலம் நீக்கிய ஒரே புரட்சிதலைவி ஜெயலலிதா அம்மயார்னு பேரு வாங்கப்போறாங்க பாருங்க... நடராஜன், திவாகரன் போன்ற உடன்பிறவா தங்கச்சியோட இரத்த சொந்தங்கள் ஒரு இரண்டு மாசம் இரும்புக்கம்பிக்குள்ள பாதுகாப்பா இருந்தா ஒடம்பு சும்மா தகதகன்னு மின்னும்னு தஞ்சாவூர்ல ஒரு சாமியார் சொல்லீருக்காரு, அது தெரியாம பெட்டிசன் போட்ட அண்ணாதிமுக காரங்களுக்கு இனிமே சொம்புதான்... தீர்க்கதரிசி அண்ணா தமிழா உன் விடிவுகாலத்த பாருன்னு ஆட்காட்டி விரல காட்டினாரு. பொன்மனச்செம்மல் புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஆட்காட்டி விரலோட இன்னொரு விரலையும் சேத்து இரட்டை இல்லை காட்டினாரு... நம்ம அம்மா அதிமுக காரனுக்கு அதுல ஒரு வெரல மடக்கி காட்டிடாங்க.... இந்த மூணு மாச பிரிவுக்கும் கருணாநிதியே காரணம்னு சொன்னாலும் சொல்லுவாங்க..
வாசகர் கடிதம்3
 இவ்வளவு கூறியிருக்கும சசிகலா நடராஜனுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்வாரா? அவ்வாறு செய்யும் படி ஜெயலலிதா சசிகலாவை வலியுறுத்துவாரா? இவ்விரண்டும் நடக்காத பட்சத்தில் இப்போது நடந்தவைகள் எல்லாமே கண் துடைப்பு நாடகம் என்பது உறுதி. இதனை புரிந்து கொள்ளாத அதிமுக தொண்டர்கள் ஏமாளிகள்.
வாசகர் கடிதம்4
 மன்னார்குடி மபியா என்ற தலைப்பில் தினமலர் எழுதிய கட்டுரையில் இருந்த உற்சாகம் இப்பொழுது இல்லாதது ஏனோ? ஜெயலலிதா வெற்றிபெற்றதுக்கு சசிகலாவும், சோவும் தான் என்ற எழுதிய உற்சாகமும் இல்லை. சசிகலா ஒரு கூடா நட்பின் உதாரணம். ஜெயலலிதாவுக்கு சனி விலகி விடாது. ஆனால் அடுத்த ஆறு மாசத்திற்கு வக்கிரத்தில் சனி உள்ளார். இதன் தாக்கம் தான இது?

வாசகர் கடிதம்5
 ஜெயலலிதா அம்மையார் அவர்களே மக்கள் எப்போழ்தும் முட்டாள்களே என்ற எண்ணத்தில்தான் இன்றுவரை அனைத்து ஆட்சியாளர்களும் ஆட்சியையும் தங்கள் சொந்த வாழ்க்கையையும் நடத்தி வருகிறார்கள். அது போலதான் நீங்களும் உங்கள் ஹைடெக் டிராமா மக்களுக்கு புரியாது என்று கணக்கு போடுகிறீர்கள். மக்கள் ஒன்றும் நீங்கள் நினைபதுபோல் முட்டாள்கள் இல்லை. விரைவில் நீங்கள் மக்களாலும், இறைவனாலும் தண்டிக்கப்படுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக