சனி, 7 ஏப்ரல், 2012

ராமஜெயம் கொலை மர்மம் விலகுகிறது… இதோ அந்த தங்க முடிச்சு!

Viruvirupu
திருச்சி காவல்துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, ராமஜெயம் கொலை மர்மத்தை போலீஸ் உடைத்து விட்டனர் என்று தெரியவருகிறது. தமக்கு கிடைத்த எல்லா தடயங்களும், அதற்குரிய இடங்களில் சரியாக பொருந்துவதாக காவல்துறையில் எமக்கு தகவல் தரும் ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ் ஒரு விஷயத்தை முதலில் எஸ்டாபிளிஷ் பண்ணியிருக்கிறது. அது, ராமஜெயம் திருச்சி தில்லைநகர் ஏரியாவில் வைத்துதான் கொலைகாரர்களின் கைகளில் சிக்கியுள்ளார்.
ராமஜெயத்தின் வேறு சில தொடர்புகள் இந்த ஏரியாவுக்கு வெளியே இருப்பதால், அந்த இடங்களில் ஏதாவது ஒன்றுக்கு அவர் சென்று, அங்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்பதாவவும் ஆரம்பத்தில் போலீஸ் ஒரு தியரி வைத்திருந்தது. இப்போது, அந்த தியரி ட்ராப் பண்ணப்பட்டு விட்டதாக தெரிகிறது.

“அவர் நிச்சயமாக தில்லை நகர் ஏரியாவில் வைத்துதான் கொலைகாரர்களின் கைகளில் சிக்கினார். அதை நிரூபிக்க எம்மிடம் சரியான ஆதாரங்கள் உள்ளன. கொலைகாரர்கள் அவரை பலவந்தமாக கடத்தினார்களா, அல்லது, இவராக அவர்களுடன் சென்றாரா என்பதில்தான் ஒரு சிறிய இழுபறி உள்ளது. அதையும் விரைவில் சால்வ் பண்ணி விடுவோம்” என்றார் எமது சோர்ஸ்.
அடுத்து அவர் தெரிவித்தது சுவாரசியமான ஒரு விஷயம்.
“அடுத்து நான் சொல்லப் போகும் விஷயத்தை போலீஸில் எப்படி தெரிந்து கொண்டோம் என்று கேட்கக்கூடாது. என்ன தடயம் வைத்திருக்கிறோம் என்றும் கேட்கக்கூடாது. விஷயம் என்னவென்று மட்டும் கூறுகிறேன்” என்ற பீடிகையுடன் அவர் கூறியது-
“ராமஜெயம் குடியிருக்கும் தில்லைநகர் பகுதியில் இருந்து பிக்கப் செய்யப்பட்ட அவர், அதே ஏரியாவில் உள்ள வீடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த வீட்டுக்குள் போகும்போது, முழுசாக உயிருடன் இருந்துள்ளார். ஆனால், அந்த வீட்டு கம்பவுண்டை விட்டு வெளியேறும்போது அவர் சுய நினைவுடன் இல்லை; அல்லது, உயிருடன் இல்லை. இதற்குமேல் எதுவும் கேட்காதீர்கள்”
அவர் கூறியதை வைத்து, நாமும் கொஞ்சம் உருட்டிப் பார்த்தோம். நாம் வந்து சேர்ந்த கன்க்ளூஷன்-
தில்லைநகர் ஏரியாவில் உள்ள ஏதோ ஒரு வீட்டில் குற்றம் நடந்திருக்கிறது என்பதை இவர்கள் (போலீஸ்) தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
அந்த வீட்டுக்குள் ராமஜெயம் சென்றபோது நேரடியாக பார்த்த சாட்சி யாரோ உள்ளார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், ராமஜெயம் அந்த வீட்டுக்குள் சென்றதை நேரில் பார்த்த ஒருவர் இருந்தால், அவருக்கு ராமஜெயம் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டாரா அல்லது, சுயமாக சென்றாரா என்பது தெரிந்திருக்க வேண்டுமே!
அந்த விஷயத்தில் போலீஸ் இன்னமும் நிச்சயமின்றி இருப்பதால், நேரில் கண்ட சாட்சிகள் போலீஸிடம் கிடையாது.
வேறு எப்படி தெரிந்து கொண்டிருப்பார்கள்?
ஒருவேளை அந்த வீட்டுக்குள் இருந்து ராமஜெயம் தனது செல்போனில் பேசிய விஷயத்தை போலீஸ் எப்படியோ அறிந்திருக்கலாம். (அவரது போனை எடுத்து மற்றையவர்கள் பேசியதல்ல; அவரே பேசியிருக்க வேண்டும்) என்பது முதலாவது பாஸிபிளிடி.
அல்லது, அந்த வீட்டுக்குள் அவரை கொண்டு சென்றபின், எதிர்பாராமல் யாரோ அந்த வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். வந்த ஆளை எப்படியோ, கொலைகாரர்கள் திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். இந்த அடைப்பட்ட நேரத்தில், வந்த அந்த நபர் ராமஜெயத்தின் குரலை கேட்டிருக்கலாம் அல்லது, அவரது உருவத்தை (உயிருடன் இருப்பதை) பார்த்திருக்கலாம்.
சரி. “அந்த வீட்டு கம்பவுண்டை விட்டு வெளியேறும்போது அவர் சுய நினைவுடன் இல்லை; அல்லது, உயிருடன் இல்லை” என்று எப்படி சொல்கிறார்கள்?
இதை யாரோ பார்த்திருக்க சான்ஸ் உண்டு. ராமஜெயத்தை கைத்தாங்கலாக கொண்டுபோய் வாகனத்தில் ஏற்றியதையோ, அல்லது தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றியதையோ கண்ட சாட்சி யாராவது இருக்கலாம். அல்லது, அந்த கார் கம்பவுண்டைவிட்டு வெளியேறி ரோட்டில் செல்லும்போது, காருக்குள் ராமஜெயம் அசைவற்ற நிலையில், சாய்ந்து இருந்ததை யாரோ பார்த்திருக்கலாம்.
போலீஸ் தற்போது வைத்திருக்கும் இந்த தியரி எந்தளவு ஸ்ட்ராங்கானது? அது, அவர்களிடம் உள்ள சாட்சிகள் எவ்வளவு ஸ்ட்ராங் என்பதைப் பொறுத்தது.
அது எப்படியோ, தில்லைநகரில் உள்ள வீடு ஒன்றில் வைத்துதான் குற்றம் நடந்திருக்கிறது என்பதை இவர்களால் எஸ்டாபிளிஷ் பண்ண முடிந்தால், அதுவே இந்த கேஸின் தங்க முடிச்சு. அதை கண்டுபிடித்து விட்டால், கொலைகாரர்களுக்கு மிக அருகில் வந்து விட்டார்கள் என்று அர்த்தம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக