செவ்வாய், 24 ஏப்ரல், 2012

மகளை களமிறக்கிக் கலக்கும் ராதா-கேரளாவுக்கே 'ஷிப்ட்' ஆன அம்பிகா!

Ambika, karthika and Radha
 
இப்போது 40 முதல் 45 வயது ஆகும் 'இளைஞர்களின்' அந்தக் கால 'கனவுக் கன்னி'களாக விளங்கிய அம்பிகா மற்றும் ராதாவின் வாழ்க்கையில் சமீப காலமாக சில திருப்பங்கள்.
அம்பிகாவையும், ராதாவையும் அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாது
. அந்த அளவுக்கு அவர்களின் 'நடிப்பு வீச்சு' ரசிகர்களை ஒரு காலத்தில் கட்டிப் போட்டு வைத்திருந்தது.
இருவரும், அந்த நாள் ஸ்டார் நடிகர்கள் ஒருவர் விடாமல் அத்தனை பேருடனும் சேர்ந்து ஜோடி போட்டுப் பட்டையைக் கிளப்பியவர்கள். தனித் தனியாக நடித்ததோடு, ஜோடியாக சேர்ந்தும் நடித்து 'தமிழ் சினிமாத் திருவிழாவில்' தூள் கிளப்பியவர்கள்.
இன்று இருவருக்கும் தனித் தனி வாழ்க்கை. தங்கை ராதா ரொம்ப காலமாக மும்பையில் செட்டிலாகிப் போயிருந்தார். அவரது முகமே பலருக்கும் மறந்து போயிருந்தது. ஆனால் ஒரு நல்ல நாளில், தனது மூத்த மகள் கார்த்திகாவோடு, தான் ஏற்கனவே பாடித் திரிந்த கோடம்பாக்கத்தில் கால் வைத்தார். கார்த்திகாவும் இன்று ஒரு நடிகை. அம்மா அளவுக்கு ஆஹாஹா என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட கார்த்திகாவுக்கும் ஒரு தனி முத்திரை கிடைத்துள்ளது - நன்றி 'கோ'.

'கோ' படத்தில் மகளுக்குக் கிடைத்த வரவேற்பால் பூரிப்படைந்திருந்த ராதாவை மேலும் 'உப்ப' வைக்கும் அளவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார் குரு நாதர் பாரதிராஜா. தனது அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் கார்த்திகாவுக்கும் முக்கிய ரோல் கொடுத்து நடிக்க வைத்துள்ளார். இதனால் கூடுதல் குஷியுடன் காணப்படுகிறார் ராதா.

இது ராதாவின் கதை. அடுத்து அம்பிகாவின் கதை. சினிமாவில் நாயகியாக வெளுத்துக் கட்டிய அம்பிகா போகப் போக அம்மா, அக்கா, அண்ணி என்று ரோல் மாறி நடிக்க ஆரம்பித்தார்.

கடைசியாக அவர் நடிப்பில் அலற வைத்த படம் அவன் இவன். நம்ம அம்பிகாவா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், 'ஊதி'த் தள்ளியிருந்தார் அம்பிகா.

அவரைத் தேடி நிறையப் பட வாய்ப்புகள் வந்தபோதிலும் அவர் புதிய படங்களை ஏற்க மறுத்து வருவதாக தெரிகிறது. இப்போது நிரந்தரமாக கேரளாவுக்கே 'ஷிப்ட்' ஆகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

கேரளாவுக்குப் போன கையோடு அங்கு மலையாளப் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்க முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளாராம். மறுபடியும் அவர் சென்னைக்கு இடம் பெயர்வது என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

அம்பிக்கு ஏன் இந்தக் கோவமோ தெரியவில்லை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக