வியாழன், 5 ஏப்ரல், 2012

பிரபுதேவா கொடுத்த மிட்-நைட் பார்ட்டி!

கடந்த ஏப்ரல் 3-ம் தேதி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான துவக்க விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்து கொண்டு நடனமாடினார்.
”திரையுலகின் பெரிய நட்சத்திரங்களின் முன்பு நடனமாடியது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது” என்று கூறிய பிரபுதேவாவிற்கு நிஜமாகவே அன்று மகிழ்ச்சியான நாள் தான். அன்று அவரது பிறந்தநாள். இது பிரபுதேவாவின் 39-வது பிறந்தநாளாகும்.
ஐ.பி.எல் நிகழ்ச்சியை முடித்த கையோடு தனது பங்களாவிற்கு புறப்பட்டார் பிரபுதேவா. தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சில எதிர்பாராத திருப்பங்களால் தனது பிறந்தநாளைக் கொண்டாட மனமில்லாமல் தனியாக பங்களாவில் இருந்திருப்பார் என்று நினைக்காதீர்கள் திரையுலக முன்னணி நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் என ஒரு பட்டாளமே குவிந்திருக்கிறது பிரபுதேவாவின் வீட்டில். இந்த இரவு விருந்தில் ஷங்கர், சூர்யா, த்ரிஷா, விஜய், விஷால், சுந்தர்.சி, குஷ்பு, ஜெயம் ரவி(மனைவியுடன்), ஹாரிஸ்ஜெயராஜ், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ” நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதே அலாதியான ஒன்று. 




அதிலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவருடனும் விருந்து சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது” என அனைவரும் பூரிப்படைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக