ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

அரசின் ஆகாஷ் டேப்லெட்ஸால் மாணவர்கள் அப்செட்

சண்டிகர்: மத்திய அரசு அறிமுகப்படுத்தும் ஆகாஷ் கையடக்க கணிணிகளை சண்டிகர் மாநில மாணவர்கள் திரும்பவும் அரசிடம் ஒப்படைத்துவிட்டனர்.
மிகக் குறைந்த விலையில் மாணவர்களுக்கு பயன்படக் கூடிய கையடக்க கணிணிகளை அரசு உருவாக்கி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சோதனை முயற்சியாக ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சண்டிகர்மாநிலத்தில் 2 கல்லூரிகளைச் சேர்ந்த 10 மாணவர்கள்தான் இக்கணிணிகளை வாங்கினர். இப்பொழுது அவர்களும் அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைத்துவிட்டனர்.
என்ன காரணம்? ஒருமுறை ஹேங்ஆகிவிட்டால் முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்த பிறகே சிஸ்டம் ரீ ஸ்டார்ட் ஆகிறது என்பது முதல் புகார். 2-வதாக கணிணியின் வேகம் மிகக் குறைவாக இருப்பதால் பயன்படுத்தவே முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதை சரிசெய்துமாறு கொடுக்கப்பட்டாலும் எப்பொழுது சரிசெய்யப்படும் என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் எவரும் அளிக்கவில்லை. இதனால் ஆகாஷ் டேப்லெட்ஸ் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆகாஷ் டேப்லெட்ஸில் கூடுதம் அம்சங்களை இணைத்து வேகமாக இயங்கக் கூடிய வகையில் வழங்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக