திங்கள், 23 ஏப்ரல், 2012

சசிகலா, கட்சி பற்றி அறியாமலிருந்த ஜெயலலிதா மக்களை பற்றி எப்படி அறிவார்: விஜயகாந்த் பேச்சு


சேலத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த அவர் செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் பேசியது: ஆட்சியில் இல்லாவிட்டாலும் எங்களால் ஆன உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறோம்.
நாங்கள் தேர்தலின்போது பணத்தையும், அதன்பின் இலவசங்களையும் கொடுத்து ஏமாற்ற மாட்டோம். அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் சரியான சாலை வசதி இல்லை. கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. தினமும் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நிலவுகிறது. இதனால், வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப்ப முற்பட்டால் எங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தனது தோழி சசிகலா விவகாரத்தில், கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதையே அறியாமலிருந்த முதல்வர் ஜெயலலிதா, மக்களை பற்றி எப்படி அறிவார் என்றார் விஜயகாந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக