செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நிஜமாகவே அஜித் ஹெலிகாப்டரில் தொங்கினார் டூப் போடவில்லை




அஜித் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் ஒரு நிமிட டிரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை(13.04.12) அன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லரில் அஜித் பறக்கும் ஹெலிகாப்டரில் ஒரு கையால் தொங்கிக்கொண்டிருப்பது போல் ஒரு காட்சி இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.இதை பற்றி பில்லா-2 படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டீபன் ரிச்டர் ” நான் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த இத்தனை காலத்தில் எவ்வளவோ சாகசம் செய்திருக்கிறேன். ஆனால் என்றும் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கும் அளவிற்கு எனக்கு தைரியம் இருந்ததில்லை. ஆனால் அஜித் அதை செய்யும் போது என் ரத்தம் உறைநிலைக்கு போய்விட்டது” என்று கூறினார். படத்தின் இயக்குனர் சக்ரி டொலட்டி “ இந்த படத்தில் அஜித் செய்திருக்கும் சண்டைக் காட்சிகளும், சாகசங்களும் டூப் போடாமல் செய்யப்பட்டவை. அஜித்தின் இந்த கடின உழைப்பினால் ரசிகர்கள் கண்டிப்பாக பெருமைப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.மேலும் இப்படத்தின் துணை இயக்குனர் ஷரத் மந்தவா பேசுகையில் “ அஜித் அந்தக் காட்சியில் நடிக்கும் போது மிகவும் பயமாக இருந்தது. ஹெலிகாப்டரிலிருந்து தொங்குவது ஸ்டண்ட் செய்பவர்களுக்கு சுலபமாக இருக்கலாம். ஆனால் அதை அஜித் செய்திருப்பது பாராட்டத்தக்க விஷயம்” என்று கூறினார்.படக்குழுவினர் அப்படித்தான் பேசுவார்கள் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்காமல் யூ-டியூபில் பில்லா-2 டிரெய்லர் ஐந்தரை லட்சம் பார்வையாளர்களை தாண்டிக்கொண்டிருக்கிறது.
he Billa 2 teaser that was released on the Tamil New Year has been the talk of the town. The teaser shows Ajith doing a very dangerous stunt, hanging from a helicopter with a single hand. The film’s stunt master Stefan Richter, in his micro-blogging page posted, “Believe me guys, in my career as stunt man, I have been a real daredevil. But when I saw how Ajith jumped off the helicopter and hung on one hand, my blood froze in my veins!” Chakri Toleti, the director of the film posted, “Billa 2 stunts in the film are done by Thala without any stunt doubles. Difficult stuff… I'm sure fans will appreciate the hard work." Assistant director Sharath Mandava tweeted, “It's a real stunt by AK. So scary... Hanging may be easy for some stunt people. But falling from a flying chopper was shock of my life!"
Looks like Ajith is doing everything to make his fans proud and happy!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக